Elon Musk: விளம்பரமில்லாத டிவிட்டர் விரைவில் நடைமுறைப் படுத்த எலன் மஸ்க் திட்டமிட்டிருப்பதாக ட்வீட் செய்துள்ளார். உலகின் மிகவும் முக்கிய சமூக வலைதளமான ட்விட்டரின் CEO  எலன் மஸ்க் சனிக்கிழமை(21/01/2023) தனது தொடர்ச்சியான ட்வீட்களில், டிவிட்டரின் சந்தா சேவையானது  பயனர்களுக்கு விளம்பரமில்லாத ட்வீட்களை காண்பிக்கும் என்று அறிவித்தார்.
கடந்த ஆண்டு அக்டோபரில் மஸ்க் டிவிட்டரை கையகப்படுத்தியதிலிருந்து டிவிட்டரில் பல்வேறு அப்டேட்டுகளை அறிமுகப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


"ட்விட்டரில் அடிக்கடி விளம்பரங்கள் வருகிறது. வரவிருக்கும் வாரங்களில் இவற்றை  நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று மஸ்க் தனது ட்விட்டர் கணக்கில் சனிக்கிழமை (21/01/2023) பதிவிட்டுள்ளார்.


மேலும், அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய திட்டத்தின்படி அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்பட்டும் அதன் பின்னர் விளம்பரங்களில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என கூறியுள்ளார். 


கட்டணச் சந்தா சேவையைத் தொடங்குவதற்கு முன், இதுவரை வருமானம் ஈட்ட இலக்கு விளம்பரங்களை நம்பியிருந்த ட்விட்டரின் வணிக மாதிரியில் இது ஒரு தீவிரமான மாற்றமாக இருக்கும்.






ஆனால் சமீபகாலமாக ட்விட்டருக்கு விளம்பரம் ஒரு கேள்விக்குறியாக உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் மஸ்க் நிறுவனத்தின் 7,500 பேர் கொண்ட பணியாளர்களில் பாதி பேரை பணிநீக்கம் செய்தார். இந்த நடவடிக்கை நிறுவனதை  கட்டுப்படுத்துவதற்கு போதுமான பணியாளர்கள் இல்லை மற்றும் அரசாங்கங்கள் மற்றும் விளம்பரதாரர்களை பயமுறுத்தியது.


வருவாயைக் கட்டியெழுப்பும்போது செலவுகளை பெருமளவில் குறைப்பதே தனது உத்தி என்றும், ட்விட்டர் ப்ளூ எனப்படும் புதிய சந்தா சேவையானது, பயனாளர்களுக்குக் கட்டணம் செலுத்தி நீலச் நிற டிக் ஒன்றை வழங்கும், இதன் மூலம்  வருவாயை அதிகரிக்க முடியும் என்றும் மஸ்க் கூறினார்.


இந்தச் சேவையானது அமெரிக்காவில் ஒரு மாதத்திற்கு 11 டாலர் செலவாகும் மற்றும் Apple இன் iOS மற்றும் Google இன் ஆண்ட்ராய்டு மொபைல்களிலும் இந்த சேவை வழங்கப்படுகிறது என்றும் டிவிட்டர்  நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள ஒரு பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






இணைய சந்தாக்கள் மாதத்திற்கு 8 டாலர் அல்லது வருடத்திற்கு 84 டாலர் என ஆஃபரிலும் கிடைக்கிறது. ட்விட்டர் ப்ளூ தற்போது அமெரிக்கா, கனடா, பிரிட்டன், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் அமலில் இருக்கிறது.


மஸ்க் தலைமையிலான ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்து குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.பெருமளவிலான பணி நீக்கங்கள், தடைசெய்யப்பட்ட கணக்குகளைத் திரும்பப் பெறுதல் மற்றும் தென்னாப்பிரிக்காவில் பிறந்த கோடீஸ்வரரை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் கணக்குகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.