Elon Musk : வாட்ஸ் ஆப்பை நம்ப முடியாது என்ற எலான் மஸ்க்கின் கருத்துக்கு மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் ஆப் மறுப்பு தெரிவித்துள்ளது.


என்ன நடந்தது?


அமெரிக்காவில் ட்விட்டர் ஊழியர் ஒருவர் வாட்ஸ் ஆப் தன்னை ஒட்டுக்கேட்பதாக புகார் அளித்துள்ளார். அதிலும் தான் தூங்கும் போதும் கூட வாட்ஸ் ஆப் தன்னை ஒட்டுக் கேட்பதாக அவர் கூறி உள்ளார். அதன்படி, அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில், "அதிகாலையில் தூங்கும்போது வாட்ஸ் ஆப் என்னை  ஒட்டுக்கேட்கிறது. வாட்ஸ் ஆப்பில் ஆடியோ அனுப்புவதற்காக மைக்ரோபோன் அனுமதி கொடுத்தேன்.  


ஆனால் நான் ஆடியோ அனுப்பாத சமயங்களில் கூட மைக்ரோபோனை வாட்ஸ் ஆப் உபயோகித்து உள்ளது. மேலும், அதிகாலை 4 மணி, 5 மணிக்கு எல்லாம் மைக்ரோபோனை வாட்ஸ் ஆப் ஆன் செய்து கேட்டு வருகிறது. அதிலும் சில முறை 20 நிமிடங்கள் கூட  விடாமல் வாட்ஸ் ஆப் ஒட்டுக்கேட்டுள்ளது. வாட்ஸ் ஆப் ஏன் இப்படி செய்கிறது என்று தெரியவில்லை" என்று ட்விட்டர் ஊழியர் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.






இதனை அடுத்து, ட்விட்டர் நிறுவன தலைவர் எலான் மஸ்க் வாட்ஸ் ஆப்பை நம்ப கூடாது  என்று பதில் ட்வீட் செய்துள்ளது இணையத்தில் பேசும்பொருளாக மாறியது. இந்நிலையில், இதற்கு வாட்ஸ் ஆப் நிறுவனம் மறுப்பு தெரிவித்து ட்வீட் செய்துள்ளது. 


வாட்ஸ் ஆப் விளக்கம்


மைக்ரோபோன் செட்டிங்கின் கன்டரோல் முழுவதும் பயனர்கள் வசம் இருக்கிறது. மேலும், அவருடன் மொபைல் தான் பிரச்சனையாக இருக்கலாம் என்றும் வாட்ஸ் ஆப்பில் எந்த பிரச்னையும் இருக்காது என்று தெரிவித்துள்ளது.


மேலும், ”இது குறித்து கூகுள் தான் விசாரணை நடத்த வேண்டும்.






 பயனர்கள் வாட்ஸ் ஆப் தளத்திற்கு மைக்ரோபோன் பர்மிஷன் அக்சஸ் தருகிறார்கள். அதன் மூலம் ஆடியோ அழைப்பு, வாய்ஸ் அழைப்பு மற்றும் வாய்ஸ் ரெக்கார்டிங் செய்யும் போது மட்டுமே வாட்ஸ் ஆப் மைக்ரோபோனை பயன்படுத்தும். இது முழுவதும் எண்ட் டு எண்ட் என்கிரிப்ஷன் (end to end encryption) பாதுகாப்பு இருப்பதால் அதனை வாட்ஸ் ஆப் தளத்தால் எதையும் கேட்க முடியாது” என்று வாட்ஸ் ஆப் விளக்கம் அளித்துள்ளதது.