Dona `ஜனநாயக கட்சியினர் சற்றே அன்பானவர்களின் கட்சி’ என்று கூறி, அதன் காரணமாகவும் தான் இதற்கு முன்பு வரை வாக்கு செலுத்தி வந்ததாகத் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், `கடந்த காலத்தில் ஜனநாயக கட்சியினர் அன்பானவர்களாக இருந்ததால் அவர்களுக்கு வாக்கு செலுத்தி வந்தேன்.. ஆனால் தற்போது அவர்கள் பிரிவினையையும், வெறுப்பையும் தூண்டும் கட்சியாக இருக்கிறார்கள். இனி நான் அவர்களுக்கு ஆதரவு தரப் போவதில்லை. குடியரசுக் கட்சிக்கு வாக்கு செலுத்துவோம். எனக்கு எதிரான அவர்களின் அசிங்கமான பிரசாரங்கள் இனி வெளிவரும் பாருங்கள்’ எனக் கூறியுள்ளது. 



இந்த ட்வீட் மட்டுமின்றி ஜனநாயக கட்சியினர் மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தி பல்வேறு ட்வீட்களைப் பதிவிட்டுள்ளார் எலான் மஸ்க். மேலும், தனக்கு எதிரான அரசியல் ரீதியான தாக்குதல்கள் மேலும் கூடுதலாக அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 






எலான் மஸ்க் அமெரிக்காவின் தற்போதைய பைடன் அரசையும், அவர் சார்ந்துள்ள ஜனநாயகக் கட்சியினரையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். பைடன் அரசு பில்லியனர் பணக்காரர்களின் மீது வரி விதிப்பது, தொழிற்சங்கத்தினரால் உற்பத்தி செய்யப்படும் எலக்ட்ரிக் வாகனங்கள் மீது வரி குறைப்பு முதலான நடவடிக்கைகள் மேற்கொள்வது எலான் மஸ்கின் விமர்சனங்களுக்கு அடிப்படை காரணமாக அமைந்துள்ளது. 





குடியரசுக் கட்சிக்கு வாக்கு செலுத்துவதாக கூறிய பிறகு, எலான் மஸ்க் மற்றொரு ட்வீட்டில், `நான் என்னை மிதவாதியாக கருதிக் கொள்ள விரும்புகிறேன்.. நான் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவனோ, ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவனோ அல்ல. கடந்த காலத்தில் நான் அளவுக்கு அதிகமாக ஜனநாயக கட்சியினருக்கு வாக்கு செலுத்தி வந்திருக்கிறேன். குடியரசுக் கட்சிக்கு இதுவரை வாக்கு செலுத்தியதே இல்லை. இந்தத் தேர்தலில் நான் அதையும் செய்வேன்’ எனக் கூறியுள்ளார். 






தான் ட்விட்டர் தளத்தை வாங்கும் போது, அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவருமான டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட நடவடிக்கையைப் பின்வாங்கப் போவதாகவும் சமீபத்தில் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். மேலும், அமெரிக்காவின் முற்போக்கு அரசியலின் தலைமையிடமாகக் கருதப்படும் கலொஃபோர்னியாவில் இருந்து இயங்குவதால் ட்விட்டர் நிறுவனம் அதிதீவிர இடதுசாரியாக செயல்படுவதாகவும் எலான் மஸ்க் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.