எலோன் மஸ்கின் திருநங்கை மகள், தனது புதிய பாலின அடையாளத்திற்கு ஏற்ப தனது பெயரை மாற்றுமாறு கோரிக்கையை தாக்கல் செய்துள்ளார்.


திருநங்கை மகள் !


எலான் மஸ்கிற்கு மொத்தமேழு குழந்தைகள் உள்ளனர். எலோன் மஸ்க் மற்றும் ஜஸ்டின் வில்சன் 2000 முதல் 2008 வரை திருமண பந்தத்தில் இருந்தபொழுது , இந்த தம்பதிகளுக்கு மகனாக பிறந்தவர்தான் அலெக்சாண்டர் சேவியர் மஸ்க் . இவருக்கு கிரிஃபின் என்ற இரட்டை சகோதரரும் உள்ளார். அலெக்சாண்டர் ஆண் குழந்தையாக பிறந்திருந்தாலும் , அவர் தன்னை ஒரு பெண்ணாகவே அடையாளப்படுத்த விரும்பினார். 






அப்பா வேண்டாம் ! 


தற்போது 18 வயது பூர்த்தி அடைந்த சேவியர் அலெக்சாண்டர் மஸ்க் தனது பாலின அங்கீகாரத்தை ஆணிலிருந்து பெண்ணாக மாற்றி, தனது புதிய பெயரை பதிவு செய்யுமாறு நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.PlainSite.org மூலம் ஆன்லைனில் கிடைக்கும் நீதிமன்ற ஆவணங்களின்படி,  கடந்த மே மாதம் கலிஃபோர்னியாவில் பெயர் மாற்றம் மற்றும் அவரது புதிய பாலின அடையாளத்தை பிரதிபலிக்கும் புதிய பிறப்புச் சான்றிதழ் ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பம் செய்த மனு  சாண்டா மோனிகாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.மேலும் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்கை அலெக்ஸ் புறக்கணித்துள்ளார். அவர் குறிப்பிட்ட ஆவணத்தில் “நான் இனி எனது தந்தையுடன் எந்த வகையிலும், வடிவத்திலும்  வாழ விரும்பவில்லை . அவருடன் தொடர்பு கொள்ள விரும்பவில்லை.” என தெரிவித்துள்ளார்.


 







எலான் ட்வீட் :


அலெக்ஸ் கடந்த மே மாதம் பெயர் மற்றும் பாலின மாற்ற  ஆவணத்தை தாக்கல் செய்தார் .  இது நடந்த   ஒரு மாதத்திற்குப் பிறகு  , எலான் மஸ்க் குடியரசுக் கட்சிக்கு தனது ஆதரவை அறிவித்தார், ஏனென்றால் குடியரசு கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் திருநங்கைகளின் உரிமைகளுக்கு ஆதரவு கொடுத்து குரல் எழுப்பினர். திருநங்கைகள் தங்களுக்கு விருப்பமான பிரதிபெயர்களைத் தேர்ந்தெடுப்பது குறித்து முன்னதாகவே மஸ்க் கணக்கு போட்டுவிட்டார் , 2020 இல், "நான் டிரான்ஸ்ஸை முழுமையாக ஆதரிக்கிறேன், ஆனால் இந்த பிரதிபெயர்கள் அனைத்தும் ஒரு கற்பனை" என்று ட்வீட் செய்திருந்தார்.