இலங்கை பொருளாதார நெருக்கடி நீடித்து வரும் நிலையில், அங்கு பெட்ரோலுக்கு மிகவும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் வாங்குவதற்காக, பெட்ரோல் பங்கில் மக்கள் மிக நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்திருக்கின்றனர். இலங்கை மக்கள் மிக நீண்ட வரிசையில் அதிக நேரம் நிற்பதால், வயதான உள்ளிட்ட பலருக்கும் உடல்நிலை பாதிப்புக்கு ஏற்படுகிறது.


இதையும் படிக்க: நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய பிரதிநிதிகள் இல்லாத ஆளுங்கட்சியாக மாறும் பாஜக: ரிப்போர்ட் சொல்வது என்ன?


இந்தியா, இலங்கைக்கு  ஆயிரக்கணக்கான டன் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கியது. இருப்பினும், அங்கு பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு குறைந்தபாடில்லை. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, பெட்ரோல், டீசல் வாங்க பல நாட்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. 


கடந்த மாதம் மருத்துவமனைக்கு செல்ல ஆட்டோவுக்கு பெட்ரோல் கிடைக்காததால், நோயாளி ஒருவர் உயிரிழந்தார். கடந்த வாரம் கொழும்பில் பாணந்துறையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்த 53 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார். 


இதுவரை எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த 9 பேர் இறந்து உள்ளனர். இந்நிலையில், அங்குருவாதோட்டையில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் கடந்த 5 நாட்களாக காத்திருந்த 63 வயது லாரி டிரைவர் உயிரிழந்தார். 


இதன் மூலம், பலி எண்ணிக்கை 10 ஆனது. இறந்த வர்கள் அனைவரும் 43 முதல் 84 வயதுக்குட்பட்டவர்களும், அனைவரும் மாரடைப்பால் பலியானதும் தெரிய வந்துள்ளது. 


இதற்கு மத்தியில், மிக நீண்ட வரிசையில் நிற்கும் மக்களுக்கு, இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோசான் மகாநாம உதவி செய்துள்ளார். பெட்ரோல் வாங்குவதற்காக விஜிராமா மவத்தா பகுதியில் நீண்ட நேரமாக வரிசையில் நின்ற மக்களுக்கு, உணவு பொருட்களை வழங்கியுள்ளார். 


இது குறித்து சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை பகிர்ந்த, இலங்கையில் உள்ள அசாதாரண சூழலை விளக்கியுள்ளார். மேலும், உடல்நிலை முடியாதவர்கள், அருகில் உள்ளவர்களின் உதவியை நாடுமாறு தெரிவித்துள்ளார். 


இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கிரிக்கெட் வீரர் டீ விற்பதாகவும் செய்தி தவறாக பரவியது. ஆனால் அவர் டீ கொடுத்து உதவி மட்டுமே செய்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண