ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) பூமியின் காந்தப்புலம் எப்படி ஒலிக்கிறது என்பதை வெளிப்படுத்தும் அச்சமூட்டும்,  வெடிப்பது போன்ற சத்தத்தை ஆடியோவாக வெளியிட்டுள்ளது. 


காந்தப்புலம் என்பது உண்மையில் நாம் காணக்கூடிய ஒன்றல்ல. ஆனால், சூரியனில் இருந்து வெளியேறும் சக்தி வாய்ந்த காற்றினால் (சூரிய எரிப்பு என்று அழைக்கப்படும்) சுமந்து செல்லும் காஸ்மிக் கதிர்வீச்சு மற்றும் சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் ஆகியவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் ஒரு சிக்கலான மாறும் குமிழி.


காந்தப்புலத்தை ஆய்வு செய்வதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட விண்வெளி ஏஜென்சியின் ஸ்வர்ம் செயற்கைக்கோளை பயன்படுத்த டென்மார்க்கின் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் காந்த சமிக்ஞைகளை எடுத்துள்ளனர். அவற்றை ஒலியாக மாற்றியுள்ளனர். கிடைத்திருக்கும் முடிவுகள், அவர்களைப் பொறுத்தவரை, மிகவும் அச்சமூட்டும் வகையில் இருக்கிறது.


 






அந்த ஐந்து நிமிட ஆடியோவில் வினோதமான அச்சமூட்டும் வகையிலான ஒலி பதிவாகியுள்ளது. ஆழமான சுவாச ஒலி போல தோன்றுகிறது.


டென்மார்க்கின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இசைக்கலைஞரும் இத்திட்டத்தின் ஆதரவாளருமான கிளாஸ் நீல்சன் ஆடியோ குறித்து கூறுகையில், "ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ஸ்வர்ம் செயற்கைக்கோள் மற்றும் பிற ஆதாரங்களிலிருந்து கிடைத்த தரவை நமது குழு பயன்படுத்தியுள்ளது.


மேலும், இந்த காந்த சமிக்ஞைகளைப் பயன்படுத்தி மைய புலத்தின் ஒலி பிரதிநிதித்துவத்தை கையாளவும் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கலை மற்றும் அறிவியலை ஒன்றிணைக்கும் திட்டமானது நிச்சயமாக பலனளிக்கும்" என்றார். 


மேலும், “டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ள சோல்ப்ஜெர்க் சதுக்கத்தின் தரையில் தோண்டி, அங்கு 30க்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகளை புதைத்ததில் இந்த மிகவும் சுவாரஸ்யமான ஒலி அமைப்பை பெற்றோம். ஒவ்வொரு ஸ்பீக்கரும் பூமியில் வெவ்வேறு இடத்தைப் பிரதிபலிக்கும் வகையில் நாங்கள் அதை அமைத்துள்ளோம். மேலும் கடந்த 100,000 ஆண்டுகளில் நமது காந்தப்புலம் எவ்வாறு ஏற்ற இறக்கமாக உள்ளது என்பதை நிரூபிக்கிறது" என்றார்.


கடந்த அக்டோபர் 24 அன்று இந்த கண்டுபிடிப்பு வெளியானதிலிருந்து, டென்மார்க்கின் கோபன்ஹேகனில் உள்ள சோல்ப்ஜெர்க் சதுக்கத்தில் உள்ள ஒலிபெருக்கிகள் ஒரு நாளைக்கு மூன்று முறை ஒலிப்பதிவு செய்து வருகின்றன.


இந்த நடவடிக்கையின் நோக்கம் மக்களை பயமுறுத்துவது அல்ல, மாறாக காந்தப்புலங்கள் இருப்பதையும், பூமியில் உயிரினங்களின் இருப்பு அதைச் சார்ந்துள்ளது என்பதை அவர்களுக்கு நினைவூட்டுவதே ஆகும் என ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.