துபாய் நாட்டில் புர்ஜ் கலிஃபா தொடங்கி பல்வேறு முக்கியமான சுற்றுலா தளங்கள் உள்ளன. அந்தவகையில் தற்போது அங்கு மீண்டும் ஒரு அசத்தலான சுற்றுலா தளமாக ஒன்று கடந்த வியாழக்கிழமை மக்களின் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது. இந்த இடத்திலிருந்து அந்நாட்டு இளவரசர் ஷேக் ஹமாத் பின் முகமது அல் மக்டோம் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அது எந்த இடம்? வீடியோ வைரலாக காரணம் என்ன?


துபாயில் புதிதாக ‘அயின் துபாய்’ என்ற இடம் கடந்த வியாழக்கிழமை திறக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் உலகிலேயே மிகவும் உயரமான ராட்டினத்தை கொண்ட இடமாக இது அமைந்துள்ளது. இது நிலபரப்பிலிருந்து 870 அடி அதாவது 250 மீட்டர் உயரம் கொண்டுள்ளது. இந்த இடத்தில் இருந்து துபாயை மக்கள் கண்டு களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. 


 






இந்த ராட்சத ராட்டினத்தில் 48 கேபின்கள் உள்ளன. இது ப்ளூ வாட்டர் தீவில் அமைந்துள்ளது. குறிப்பாக பிரபலமான ஜூமேரியா கடற்கரை விடுதிக்கு எதிரில் இடம்பெற்றுள்ளது. இந்த ராட்சத ராட்டினத்தில் செல்ல விரும்பும் மக்கள் 30-60 நிமிடங்களுக்கு முன்பாகவே இங்கு வர வேண்டும். இது ஒரு முறை முழுமையாக சுற்றி முடிக்க சுமார் 38 நிமிடங்கள் எடுக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ராட்சத ராட்டினம் கட்டும் பணிகள் சுமார் 6 பில்லியன் செலவில் 2013ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. இந்த ராட்சத ராட்டினத்திற்கு சுமார் 11 ஆயிரம் டன் எஃகு பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பாரீஸில் அமைந்துள்ள ஈஃபுல் டவரில் பயன்படுத்தப்பட்டத்தை விட இரண்டு மடங்கு அதிகமானது. 


 






இந்த ராட்சத ராட்டினத்தில் அமர்ந்து கொண்டு தேநீர் அருந்துவது போல் துபாய் இளவரசர் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை தற்போது வரை சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். அத்துடன் பலரும் லைக் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 


 மேலும் படிக்க:’யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க’ - சொந்தமாக செயலி உருவாக்கிய டொனால்ட் டிரம்ப்!