Donald Trump: அமெரிக்க அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே டொனால்ட் ட்ரம்ப் கையொப்பமிட்ட முக்கிய ஆவண விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


அதிபர் ட்ரம்ப் அதிரடி:


அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே பல, முக்கிய கோப்புகளில் ட்ரம்ப் கையொப்பமிட்டு கவனம் ஈர்த்துள்ளார். அதில், முன்னாள் அதிபர் பைடன் ஆட்சிக் காலத்தின் 78 கொள்கைகளை மாற்றியமைக்கவும், ஒழுங்குமுறை முடக்கத்தை விதிக்கவும், கூட்டாட்சி பணியமர்த்தலை நிறுத்தவும் மற்றும் வாழ்க்கைச் செலவு நெருக்கடியை நிவர்த்தி செய்யவும் நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.



அதேநேரம், பாரிஸ் காலநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் ஆவணத்தில் கையொப்பமிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூடுதலாக, பேச்சு சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கும், அரசாங்க தணிக்கையைத் தடுப்பதற்கும், அரசியல் எதிரிகளுக்கு எதிராக அரசாங்கத்தின் ஆயுதமயமாக்கலை முடிவுக்குக் கொண்டுவரும் ஆவணங்களிலும் ட்ரம்ப் கையெழுத்திட்டார். மேலும், அமெரிக்கர்கள் மீது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள வாழ்க்கைச் செலவு நெருக்கடியை நிவர்த்தி செய்யும் நோக்கிலான ஆவணங்களிலும் கையெழுத்திட்டுள்ளார்.


முதல் நாளே ட்ரம்ப் போட்டு உத்தரவுகள்:


1. அதிபர் ட்ரம்பின் முதல் நடவடிக்கையாக, 78 நிர்வாக நடவடிக்கைகள், நிர்வாக உத்தரவுகள், அதிபரின் குறிப்புகள் மற்றும் பைடன் நிர்வாகத்தின் பிற உத்தரவுகளை ரத்து செய்வதில் கையெழுத்திட்டார்.


2.  தனது உரையில் முன்னர் அறிவித்தபடி, ஒரு ஒழுங்குமுறை முடக்கத்தையும் அமல்படுத்தினார். இது அரசாங்கமும் நிர்வாகமும் முழுமையாகக் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை அதிகாரத்துவத்தினர் புதிய விதிமுறைகளை வெளியிடுவதைத் தடுக்கிறது.


3. ராணுவம் மற்றும் வேறு சில பிரிவுகளைத் தவிர்த்து, முழுக் கட்டுப்பாடு நிறுவப்பட்டு, அரசாங்கத்தின் நோக்கங்கள் தெளிவாகத் தெரியும் வரை, அனைத்து ஃபெடரல் வேலை சேர்ப்பு நடவடிக்கைகளும் இப்போது முடக்கப்படும்.


4. மற்றொரு உடனடி நடவடிக்கை, ஃபெடரல் தொழிலாளர்கள் முழுநேர, நேரில் வேலைக்குத் திரும்புவதற்கான தேவை.


5. அமெரிக்க குடும்பங்களை பெரிதும் பாதித்துள்ள தற்போதைய வாழ்க்கைச் செலவு நெருக்கடியை நிவர்த்தி செய்ய ஃபெடரல் துறைகள் மற்றும் ஏஜென்சி நிறுவனங்களுக்கும் அதிபர் உத்தரவு பிறப்பித்தார்.


6. பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்ட டிரம்ப், இந்த முடிவை ஐக்கிய நாடுகள் சபைக்கு அதிகாரப்பூர்வ கடிதம் மூலம் தெரிவிக்கிறார்.


7. பேச்சு சுதந்திரத்தை மீட்டெடுக்கவும், எதிர்காலத்தில் பேச்சு சுதந்திரம் மீதான அரசாங்கம் தணிக்கை செய்வதைத் தடுக்கவும் அவர் ஃபெடரல் அரசாங்கத்தை அறிவுறுத்தியுள்ளார்.


8. முந்தைய நிர்வாகத்தின் போது காணப்பட்டதைப் போல, அரசியல் எதிரிகளுக்கு எதிராக அரசாங்க நிறுவனங்களை ஆயுதமயமாக ஏவுவதை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார்


இதையும் படியுங்கள்: Donald Trump: நான் வந்துட்டேன்..! முதல்நாளே சம்பம் செய்த அதிபர் ட்ரம்ப் - இத்தனை அறிவிப்புகளா? சீனாவிற்கு ஆப்பா?