உலகின் தன்னலமற்ற உயிரினங்களில் என்றுமே டால்ஃபின்கள் முதலிடம் பிடிப்பவை. கடல் பிராணியான டால்ஃபின்கள் பெரும்பான்மை மக்களுக்கு பெரிதும் பரிட்சயம் இல்லாதவை என்றாலும், டால்ஃபின்களின் வீடியோக்கள் பார்வையாளர்களை குதூகலப்படுத்த தவறியதே இல்லை.
அந்த வகையில் முன்னதாக கடலில் தத்தளித்த நாய் ஒன்றை மீட்டு மீண்டும் படகில் விட்ட டால்ஃபினின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை செல்லப்பிராணி நாயின் உரிமையாளர் முன்னதாக இணையத்தில் பகிர்ந்திருந்த நிலையில், இந்த வீடியோ 21 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும் மூன்று லட்சம் ரீட்வீட்களையும் பெற்று லைக்குகளை அள்ளி வருகிறது.
இதே போல் முன்னதாக ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட யானைக் குட்டியை தாய் யானை காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
குட்டி யானையை மீட்ட தாய்:
பின் கரை பக்கம் செல்லுமாறு தாய் யானை குட்டிக்கு அறிவுறுத்தியது. பின்னர் சிறிது நேரம் போராட்டத்திற்கு பிறகு யானைக்குட்டியை, தாய் யானை பத்திரமாக கரையை மீட்டது. பின்னர் தாயும் குட்டியும் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டன. இந்த வீடியோவை இந்திய வன அதிகாரி பர்வீன் கஸ்வான், சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவானது மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள நக்ரகட்டா பகுதியில் எடுக்கப்பட்டிருக்கிறது.
பலரும் நெகிழ்ச்சி:
இந்த வீடியோவை, தற்போது பலரும், சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் தாயின் பாசம் குறித்து பலரும் நெகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.