சதா சர்வகாலமும் சண்டையிடும் நபர்களைப் பார்த்து ஏன் நாயும் பூனையும் மாதிரி அடித்துக் கொள்கிறீர்கள் எனக் கேட்பது நம் ஊரில் வழக்கம். அப்படி எக்காலத்திலும் தங்களுக்குள் ஒத்தே வராத விலங்கு இனங்கள் நாயும் பூனையும்.


இதில் வீட்டுப் பூனையாக இருந்தாலும் சரி, காட்டுப் பூனையாக இருந்தாலும் சரி,  ஏன் பூனைக் குடும்பத்தின் அதிபலசாலி உயிரினமான புலியாக இருந்தாலும் சரி நாய்களுக்கு அவற்றுடன் கொஞ்சமும் ஒத்து வராது என்பதை நிரூபிக்கும் வகையில் முன்னதாக வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.


வலுவான புலி ஒன்றுடன் நாய்  ஒன்று மல்லு கட்டி மோதும் இந்த வீடியோ, அனிமல்ஸ் பவர் எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னதாகப் பகிரப்பட்டு அதிக லைக்குகளை வாரிக்குவித்து வருகிறது.


கோல்டன் ரெட்ரீவர் எனும் இனத்தைச் சேர்ந்த இந்த நாய் புலியுடன் சண்டைக்குப் போவதோடு, அதன் காதையும் கடிக்க முயற்சிக்கிறது.


 






வெளிநாட்டில் மிருகக்காட்சி சாலை ஒன்றில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இரண்டு விலங்குகளுக்கும் அருகில் சிங்கம் ஒன்றும் இந்த சண்டைக்குள் தலையிட விரும்பாத வண்ணம் அமைதி காத்து நின்று கொண்டிருப்பதும் காண்போரை வியப்புக்குள்ளாக்குகுறது.


இந்நிலையில், ”எங்க தலக்கு தில்ல பாத்தீங்களா” என்ற தொனியில் நெட்டிசன்கள் வீடியோவின் கமெண்ட் செக்ஷனில் கருத்து தெரிவித்து களமாடி வருகின்றனர்.


இதேபொல் முன்னதாக உலகின் மிக வயதான நாய் எனும் பெருமையைப் பெற்ற பெபில்ஸ் எனும் நாய், தன் 22ஆவது வயதில் உயிரிழந்தது இணையவாசிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. டெடி ஃபாக்ஸ் டெரியர் என்ற வகையறா நாயான பெபில்ஸ் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.



அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் வசித்துவந்த இந்த நாய்க்குட்டிக்கு அவரது உரிமையாளர்கள் நெகிழ்ச்சி பொங்க பிரியாவிடை கொடுத்தனர். தனது 23 வயதை எட்ட 5 நாட்களே இருந்த நிலையில் பெபில்ஸின் மறைவு சோகத்தை ஏற்படுத்தியது.