இலங்கை வீரர் சுட்டுக்கொலை:
இலங்கை கிரிக்கெட்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் கேப்டனாக செயல்பட்டவர் தம்மிக்க நிரோஷன். முன்னாள் கிரிக்கெட் வீரரான இவருக்கு தற்போது 41 வயது. இந்நிலையில் தான் தம்மிக்க நிரோஷன், காலியில் உள்ள அம்பலாங்கொடையில் அவரது வீட்டிற்கு வெளியே இன்று சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்.
போலீஸ் தீவிர விசாரணை:
கிரிக்கெட் வீரர் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டது இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை காவல்துறையைச் சேர்ந்த ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவா பேசுகையில், " கும்பலாக சேர்ந்து அவரை சுட்டுக்கொன்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன" என்று கூறியுள்ளார்.
யார் இந்த தம்மிக்க நிரோஷன்?
தம்மிக்க நிரோஷன் முன்னாள் இலங்கை U-19 உலகக் கோப்பை கேப்டனாக செயல்பட்டவர். இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் கடந்த 2000 ஆம் ஆண்டில் அறிமுகமானர். அப்போது சிறிது காலம் இலங்கை அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார். தம்மிக்க நிரோஷனாவின் தலைமையில் தான் U-19 உலகக் கோப்பையில் இலங்கை அணி பங்கேற்றி விளையாடியது. வேகப்பந்துவீச்சாளரான அவர் அந்த உலகக்கோப்பை தொடரில் ஐந்து இன்னிங்ஸ்களில் 19.28 சராசரியுடன் 3/38 என்ற சிறந்த ஸ்பெல்லுடன் ஏழு விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
அவரது தலைமைத்துவமானது ஃபர்வீஸ் மஹரூப், ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் உபுல் தரங்கா போன்ற திறமைகளை வளர்த்தது, அவர்கள் இலங்கை அணியை மிக உயர்ந்த மட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தினர். நிரோஷனாவின் வாழ்க்கையில் 2001 முதல் 2004 வரை காலி கிரிக்கெட் கிளப்பிற்காக 12 முதல்தர ஆட்டங்கள் மற்றும் 8 லிஸ்ட்-ஏ போட்டிகளில் விளையாடி 300 ரன்களுக்கு மேல் எடுத்தார் மற்றும் 19 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சிறந்த கிரிக்கெட் வாழ்க்கையை பெற்றிருந்த போதிலும் 2004-ம் ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட் வடிவங்களிலிருந்தும் ஓய்வை விரைவாகவே அறிவித்தார்.