COVID-19 New Variant IHU: ”ஒமிக்ரானை விட அபாயகரமானது” - பிரான்ஸில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொரோனா மாதிரி நோய்

COVID-19 New Variant IHU: ஓமிக்ரான் நோய் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்நிலையில் ​​​​கோவிட்-19 விட மாறுபட்ட புதிய நோய் ஒன்று சமீபத்தில் பிரான்சில் உருவாகியுள்ளது.

Continues below advertisement

IHU என பெயரிடப்பட்ட நோயான இது மெடிட்டரேனி இன்ஃபெக்ஷன் நிறுவனத்தில் உள்ள கல்வியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. ஒமிக்ரான் நோயைவிட இந்த நோய் புதிய மாறுபாட்டதாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்களின் தெரிவிக்கின்றனர்.

Continues below advertisement

 இந்த நோய் பிரான்ஸ் நாட்டில் 12 பேருக்கு பதிவாகியுள்ளது. பிரான்ஸ், மார்செலியிலிருந்து ஆப்பிரிக்க நாடான கேமரூனுக்குப் பயணம் செல்ல இருந்தபோது கண்டறியப்பட்டது..

 அமெரிக்க தொற்று நோயியல் நிபுணர் மற்றும் சுகாதாரப் பொருளாதார நிபுணர் எரிக் ஃபீகல்-டிங், புதிய மாறுபாட்டால் டிவிட்டரில் எச்சரிக்கை விடுத்துள்ளார்..

 

 "எல்லா நேரத்திலும் புதிய வகையான நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை மிகவும் ஆபத்தானவை என்று அர்த்தமல்ல.  மாறுபட்ட நோய் என அறியப்பட்ட அனைத்தையும் ஆபத்தாக உணர்வது சரியானதல்ல” என்று நிபுணர் எரிக் ஃபீகல்-டிங் ட்விட்டரில் பதிவிட்டார்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Continues below advertisement
Sponsored Links by Taboola