ஒரே உலகம். ஒரே சூரியன். ஒரே சந்திரன் என்றாலும் கூட ஒவ்வொரு இடத்திலும் காலநிலை வெவ்வேறாகவே இருக்கிறது. சில குளிர் பிரதேசங்களாகவும், சில வெப்ப மண்டலங்களாகவும். சில வறண்ட பாலைவனமாகவும் இருக்கின்றன.


இந்த விந்தையான உலகத்தில் சில விந்தையான இயற்கை நிகழ்வுகளும் நடந்து நம்மை ஆச்சர்யப்பட வைக்கின்றன. டிசம்பர் 21 ஆம் தேதி அப்படி இயற்கை ஆச்சர்யம் தரும் ஒரு நாள். இந்த நாளில் வட துருவத்தில் பகல் பொழுது குறுகியதாகவும் இருக்கின்றது. தென் துருவத்தில் பகல் பொழுது 12 மணி நேரம் அதிகமானதாகவும் இருக்கிறது.


வின்ட்டர் சால்ஸ்டைஸ் எனப்படும் டிசம்பர் சால்ஸ்டைஸ் இந்த ஆண்டு இன்று டிசம்பர் 21 செவ்வாய்க்கிழமை நிகழ்கிறது. இதே நிகழ்வு டிச.20, 21, 22, அல்லது 23 தேதிகளில் நிகழலாம்.


இந்த நாளில் வட துருவத்தில் அதிக மறைமுக சூரிய வெளிச்சம் கிடைக்கிறது. பூமி அதன் அச்சில் 23.5 டிகிரி என்ற அளவில் சாய்வதால் இவ்வாறாக மறைமுக சூரிய ஒளி அதிகமாகக் கிடைக்கிறது. அதவேளையில் தென் துருவத்தில் அதிகமாக நேரடி சூரிய ஒளி கிடைக்கிறது அதனாலேயே டிசம்பர் சால்ஸ்டைஸில் வட துருவத்தில் பகல் பொழுது குறுகியதாகவும் தென் துருவத்தில் பகல் பொழுது அதிகமாகவும் இருக்கின்றது.


இந்த நிகழ்வின் கால அளவு 12 மணி நேரம் வரை கூட வித்தியாசப்படுகிறது.


பூமத்தியரேகை அருகே உள்ள பகுதிகளில் மறைமுக சூரிய வெளிச்சம் அதிகமாக விழுவதால், அங்கே தட்பவெப்பம் குறைவாக இருக்கும். பூமத்தியரேகைக்கு தெற்கே உள்ள பகுதிகளில் சற்றே கதகதப்பான வெப்பநிலை நிலவும்.


சால்ஸ்டைஸ் என்றால் என்ன?


பூமி சூரியனை எப்போதும் சுற்று வருவதை போல் பூமி தன்னை தானே மேற்குப் பகுதியிலிருந்து கிழக்குப் பதிக்கு சுற்றும். இதன்காரணமாக தான் பூமியில் பகல் மற்றும் இரவு என்ற இரு மாறுபாடுகள் வருகின்றன. பூமி சரியாக வட்டமாக இருந்து தன்னை தானே சுற்றி வந்தால் அனைத்து இடங்களில் ஒரே மாதிரியாக பகல் மற்றும் இரவு இருக்கும். ஆனால் பூமி அப்படி சுற்றாமல் தன்னுடைய வட்டப்பாதையில் 23.5 டிகிரி (Earth's axis) சாய்ந்து தன்னைத்தானே மற்றும் சூரியனை சுற்று வருகிறது. இதன் காரணமாக அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் பகல் மற்றும் இரவு வருவது இல்லை. 


பூமி சூரியனை சுற்றும் போது வடக்கு பகுதியில் கடகரேகைக்கு(Tropic of Cancer) நேராக சூரியான வரும்போது சம்மர் சால்ஸ்டைஸ் நடக்கும். அதாவது பூமியின் வடக்கு பகுதியில் அதிக நேரம் சூரிய வெளிச்சம் இருக்கும். குறிப்பாக வடக்கு துருவத்தில் இன்று சூரியன் மறையாமல் இருக்கும். இதன் காரணமாக வடக்கு பகுதியில் பகலின் நேரம் வழக்கமான 12 மணி நேரத்தைவிட சற்று அதிகமாக இருக்கும்.


டிசம்பர் மாதத்தில் சூரியன் சரியாக மகரரேகைக்கு(Tropic of Capricorn) நேராக வரும். அப்போது வின்டர் சால்ஸ்டைஸ் (Winter Solstice) நடக்கும். அந்த சமயத்தில் பூமியின் தென்பகுதியில் பகலின் நேரம் இரவைவிட அதிகமாக இருக்கும். வடக்கு பகுதியில்  சூரிய வெளிச்சம் குறைவாக இருக்கும் இதனால் அங்கு இரவு நேரம் அதிகமாக இருக்கும்.
இன்று வின்ட்டர் சால்ஸ்டைஸ் நிகழ்கிறது. இதனால் தென் துருவத்தில் பகலின் அளவு சற்று அதிகமாக இருக்கும்.