கிம் ஜாங்-உன்னின் ஹேர்ஸ்டைல் சர்வதேச தலைப்புச் செய்திகளில்  பலமுறை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மற்றும் வட கொரியாவின் குடிமக்களின் மீது உருவாக்கப்படும் வினோதமான சட்டங்கள் உலகம் முழுவதும் அடிக்கடி அதிர்ச்சியை ஏற்படுத்தும். அதுபோல சமீபத்தில் அந்த நாட்டு குடிமக்கள் முடி வைத்து கொள்ளும் ஸ்டைலில் வரையறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வட கொரியாவின் சர்வாதிகாரியான கிம் அவரை போலதான் அந்நாட்டின் ஆண்கள் அனைவரும் தலைமுடியை வெட்ட வேண்டும் என்றும், திருமணமாகாத பெண்கள் நாட்டில் குறைவான முடி மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்றும் கட்டாயமாக்கியதாகவும் சொல்லப்பட்டது. 



ஒரு நபர் முடி வெட்டுவதற்கு ஒரு முடிதிருத்தும் நபரிடம் கோரிக்கையாக வைக்கும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒன்றும் பெரிதாக இல்லை, வட கொரிய தலைவர் கிம் போலவே தனது தலைமுடியை ஸ்டைல் ​​செய்ய அவர் விரும்பினார். சிகையலங்கார நிபுணர் விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல், உண்மையாகவே சவாலை ஏற்றுக்கொண்டு, களத்தில் இறங்குகிறார். தற்போது வைரலாக ஓடிக்கொண்டிருக்கும் வீடியோவில், வாடிக்கையாளர் சேவைக்காக வைத்திருக்கும் ஒரு நாற்காலியில் அமர்ந்து முடி திருத்துவதை செல்போனில் படம்பிடிக்கிறார்.


சிகையலங்கார நிபுணர் மிகவும் துல்லியமாக கிம் ஜாங் உன்னின் ஹேர்ஸ்டைலை போல அப்படியே கொண்டு வருகிறார். வாடிக்கையாளர், அவரது நிபுணர், ஒப்பனையாளர் என அங்கிருந்த அனைவரும் அந்த ஹேர்ஸ்டைலில் அந்த நபரின் தோற்றத்தைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். முடி வெட்டி முடித்த பிறகு, அந்த நபர் வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். அவர் அதை முதலில் டிக்டாக்கில் பகிர்ந்தார், அங்கிருந்து நெட்டிசன்கள் ரெட்டிட் உள்ளிட்ட பிற சமூக வலைதளங்களில் வீடியோ கிளிப்பை பரப்பினர். அந்த வீடியோவில், “முடிதிருத்துபவர்: உங்களுக்கு என்ன வேண்டும்?


அவர்: கிம் ஜாங் உன்...


முடிதிருத்துபவர்: "இனி சொல்லவேண்டாம்."


"கிம் ஜாங் உன் ஸ்டைல் ​​ஹேர்கட்,"


என்பதுபோல ரெட்டிட்டில் தலைப்பிடப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது.



வீடியோ வலைதளங்களில் ஆயிரக்கணக்கான லைக்ஸை பெற்றதுடன், நெட்டிசன்கள் எல்லோரும் கிம்மின் கட்டளைகளை எதிர்த்து விமர்சித்து வருகிறார்கள். கமெண்ட்டில் பல நக்கலான விஷயங்கள் நிரம்பி வழிந்தன, "ஹேர் ஸ்டைலிஸ்ட் அதை ரசித்து அனுபவிப்பதை நான் விரும்புகிறேன்." என்று ஒரு பயனர் எழுதியிருக்கிறார்.


வடகொரிய தலைவர் சமீபத்தில் அவரது ஹேர் ஸ்டைல் மாற்றத்தின் காரணமாக உலக ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டு வந்தார். நாட்டின் 73-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இராணுவ அணிவகுப்பின்போது, ​​அவர் மிகவும் ஒல்லியாக காணப்பட்டார். வெள்ளி டையுடன் பழுப்பு நிற உடையை அணிந்து வந்தார்


சில நாட்கள் முன்பு, கிம் ஜாங்-உன் மேற்கத்திய பாணியிலான "சீரழிந்த" ஃபேஷன் போக்குகளைக் ஒழிக்கும் முயற்சியில் புரட்சி வாசகங்கள் எழுதப்பட்ட டி-ஷர்ட்களை சட்டத்திற்கு விரோதமானது என்று அறிவித்தார். ஒல்லியான, கிழிந்த (Torned) ஜீன்ஸிற்கும் தடை விதித்தார். மூக்கு குத்துதல், உதடு குத்துதல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும் அவர் உத்தரவிட்டு இருந்தார்.