மிருகக்காட்சி சாலை ஒன்றில் தலையில் விக் அணிந்தபடி அன்ன நடைபோடும் முதலையின் வீடியோவை சிரிப்பை வரவழைத்து நெட்டிசன்களிடம் லைக்ஸ் அள்ளி வருகிறது.


நாய், பூனைகள் தொடங்கி ஆமைகள், ஆந்தைகள் வரை பல வித்தியாசமான செல்லப் பிராணிகளும் இணையத்திலும், இன்ஸ்டாவிலும் தங்கள் ஓனர்கள் மற்றும் தங்கள் சொந்த பேஜ்கள் மூலம் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.


அந்த வகையில், The reptile zoohe reptile zoo எனப்படும் ஊர்வனவற்றுக்கான இன்ஸ்டா பக்கத்தில், தலையில் விக் அணிந்தபடி அன்ன நடைபோடும் முதலை, அதனைப் பராமரிக்கும் பெண் காப்பாளர் அடங்கிய வீடியோ காண்போருக்கு குபீர் சிரிப்பை வரவழைத்து லைக்ஸ் அள்ளி வருகிறது.






இந்த முதலை உள்பட இங்கிருக்கும் பெரும்பாலான பிராணிகளை இப்பெண் காப்பாளர் தான் அவற்றின் சிறு வயது முதல் கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார்.


இதே போல் முன்னதாக தண்ணீரிலிருந்து வெளியே வரும் முதலை ஒன்றை செல்லப்பிராணிபோல் தடவிக் கொடுத்து செல்லம் கொஞ்சும் நபரின் வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. 


தண்ணீரில் இருந்து வெளிவரும் முதலைக்கு உணவளிக்கும் ஒரு நபர் தனது கால்களால் அதனைச்சுற்றி வளைத்து பாசமாக தடவிக்கொடுக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.






15 வினாடிகள் நீளமுள்ள இந்த வீடியோ, முதலையை சில முறை சீண்டி, இறுதியாக அம்மனிதர் உணவு கொடுக்கிறார். ஒரு பக்கம் இவர்களது பாசப் பிணைப்பு காண்போரை மகிழ்ச்சியிலும், மற்றொரு புறம் அச்சத்திலும் ஆழ்த்தி வருகிறது.


90-களில் ’முதலை மனிதர்’எனக் கொண்டாடப்பட்ட ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீவ் இர்வினை நினைவூட்டும் வகையில் இந்த முதலை வீடியோக்கள் அமைந்து நெட்டிசன்களின் உள்ளங்களைக் கவர்ந்து வருகின்றன.