கொரோானா இறுதியில் சாதாரண ஜலதோஷத்தைப் போலவே மாறிவிடும் என ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை உருவாக்கிய பேராசிரியர் டேம் சாரா கில்பர்ட் தெரிவித்துள்ளார்.


உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியது கொரோனா வைரஸ். கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கிய கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் உலக நாடுகளில் உள்ள அனைத்து  விஞ்ஞானிகளும் ஒவ்வொரு தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தான் தற்போது கோவாக்சின், கோவிஷூல்டு, மாடர்னா, ஸ்பிட்னிக் வி போன்ற தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இத்தகைய தடுப்பூசிகள் முற்றிலும் வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தாவிட்டாலும்,  நோய் எதிர்ப்புச்சக்தியை ஏற்படுவதாக நம்பப்படுகிறது. இந்நிலையில் தான் கொரோனா தொற்றை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதற்காக புதிய தடுப்பூசிகளினைக் கண்டுபிடிப்பதில்  விஞ்ஞானிகள் அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.





இந்த சூழலில் தான், கொரோனா வைரஸைக்கண்டு மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும், இந்த கொடிய வைரஸ் காலப்போக்கில் வெறும் காய்ச்சல் மற்றும் ஜலதோசம் போல வந்துப்போகும் வைரஸாக மாறிவிடும் என  கொரோனா தடுப்பூசியை உருவாக்கியரான பேராசிரியர் டமி சாரா கில்பேட் கூறியுள்ளார்.  மேலும் இந்த கொரோனா வைரஸ் திடீர் மாற்றம் பெற வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.


மேலும் பொதுவாக எந்தவொரு வைரஸ்  மக்களைத்தாக்கினாலும் அதன் வீரியத்தன்மையை  இழந்துவிடும் எனவும், எனவே மாறுபட்ட கொரோனா வைரசினால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் பேராசிரியர் சாரா கூறியுள்ளார். ஏற்கனவே நாம்  கொரோனா காலத்தொடக்கத்தில் இருந்தே நான்கு வெவ்வேறு வகையான கொரோனா வைரசுடன் வாழ்ந்துக்கொண்டிருக்கும். இந்த சூழலில் எந்த நேரத்தில், எப்படி தாக்கும்? எவ்வாறு முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நமக்கு ஏற்கனவே தெரிந்தவிஷயம் தான்.


எனவே கொரோனா வைரசின் மாறுபாட்டினால் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் கொள்ளத்தேவையில்லை என கூறிய அவர், காலப்போக்கில் சாதாரண ஜலதோஷமாகவே மாறக்கூடும் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளும் என்பது தான் தெரியவில்லை என கூறியுள்ளார். இருந்தப்போதும் கொரோனா தொற்றினை  சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு இருப்பது முக்கியம் எனவும்தெரிவித்துள்ளார்.





குறிப்பாக கொரோனா தொடர்பான தடுப்பூசிகளைக் கண்டுபிடிப்பதில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் Jenner நிறுவனத்தில் அஸ்ராஷெனிக்கா தடுப்பூசியை உருவாக்கிய குழுவை தலைமையேற்று நடத்தியவர் தான் 59 வயதான பேராசிரியர் டாம் சாரா.  கொரோனாவை ஒழிப்பதற்கும், நோய் எதிர்ச்சக்தியை ஏற்படுத்துவதற்குமான தடுப்பூசியை கண்டுபிடிக்க உறுதுணையாக இருந்தமையால் இவர் தற்போது தெரிவித்துள்ள கருத்து மக்களிடையே ஓரளவிற்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.