Prophet Mohammad Row :முகமது நபிகள் குறித்த சர்ச்சை பேச்சு: லேட்டாக வந்து கொந்தளித்த அமெரிக்கா...தொடரும் நெருக்கடி..

"இரண்டு பாஜக நிர்வாகிகளின் அவதூறான கருத்துக்களை நாங்கள் கண்டிக்கிறோம். அந்தக் கருத்துகளை கட்சி பகிரங்கமாகக் கண்டித்ததை கண்டு மகிழ்ச்சியடைந்து உள்ளோம்" என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Continues below advertisement

பாஜகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களான நுபூர் சர்மா, நவீன் குமார் ஆகியோர் முகமுது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரச்னையை தீர்க்கும் வகையில் அனைத்து மதங்களை மதிப்பதாக மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும், இந்த சர்ச்சை தீர்ந்தபாடில்லை. 

Continues below advertisement

இந்நிலையில், முகமது நபி குறித்து இந்தியாவின் ஆளும் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தெரிவித்த கருத்துக்கு அமெரிக்கா வியாழக்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்லாமிய நாடுகளில் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், "இரண்டு பாஜக நிர்வாகிகளின் அவதூறான கருத்துக்களை நாங்கள் கண்டிக்கிறோம். அந்தக் கருத்துகளை கட்சி பகிரங்கமாகக் கண்டித்ததை கண்டு மகிழ்ச்சியடைந்து உள்ளோம். மத சுதந்திரம், நம்பிக்கை உள்ளிட்ட மனித உரிமைகள் தொடர்பான விவகாரங்கள் குறித்து மூத்த மட்டங்களில் இந்திய அரசுடன் நாங்கள் தொடர்ந்து உரையாடி வருகிறோம். மேலும் மனித உரிமைகளுக்கான மரியாதையை ஊக்குவிக்க இந்தியாவை ஊக்குவிக்கிறோம்" என்றார்.

ஈரான், ஈராக், குவைத், கத்தார், சவுதி அரெபியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், மாலத்தீவுகள், லிப்யா, இந்தோனேசியா ஆகிய 15 நாடுகள் இந்திய அரசுக்கு எதிராக தங்களது அதிகாரப்பூர்வ எதிர்ப்பினை தெரிவித்தன.

இதை கண்டித்துள்ள அந்த நாடுகள், இந்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவித்த பாஜக நிர்வாகிகளுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை கெடுத்துள்ளதாக விமர்சனம் மேற்கொண்டன.

இதற்கு மத்தியில், விளக்கம் அளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், "கூறப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய கருத்துகள் எந்த விதத்திலும் இந்திய அரசின் கருத்துகளை பிரதிபலிக்கவில்லை. அவை, குறிப்பிட்ட ஒரு கும்பலின் கருத்து மட்டுமே" என தெரிவித்தது.

சர்வதேச நாடுகளின் அழுத்தத்திற்கு மத்தியில், இரண்டு செய்தி தொடர்பாளர்களையும் பாஜக கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியது. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "எந்த ஒரு மதத்தையும் அல்லது பிரிவினரையும் அவமதிக்கும் கொள்கைக்கு எதிராக உள்ளோம். அம்மாதிரியான நபர்களையோ அவர்களின் தத்துவத்தையோ ஊக்குவிக்கவில்லை" எனக் குறிப்பிடப்பட்டது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola