Columbia Helicopter Crash :  கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் பெண் அதிகாரி உட்பட 4 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


தென் அமெரிக்க நாடான கொலம்பியால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.  ராணுவ தளவாடங்களை விநியோம் செய்யும் பணியில் ராணுவ ஹெலிகாப்டர் ஈடுபட்டிருந்தது. அதில் ஒரு அதிகாரி உட்பட 4 பேர் பயணித்துள்ளனர். அப்போது ஹெலிகாப்டர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கிழே விழுந்து நொறுங்கியது. உடனே ஹெலிகாப்டர் தீப்பிடித்ததில் அதில் இருந்த ராணுவ வீரர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.


இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசார் தகவல் தெரிவித்தனர். உடனே மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து பணிகளை தொடங்கினர். அப்போது உடல் கருகி இருந்த ராணுவ வீரர்கள் 4 பேரின் சடலங்களை மீட்டனர். ஜூலியத் கார்சியா, ஜோஹன் ஓரோஸ்கோ, ஹெக்டர் ஜெரெஸ், ரூபன் வெகுய்சாமோன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.


இந்த விபத்து குறித்து கொம்பியா கவர்னர் கூறுகையில், "ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தது மனவருதத்தை அளிக்கிறது. ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருவது. மேலும் உயிரிழந்த 4 பேர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என மேற்கு கொலம்பியா கவர்னர் ஃபார்லின் பெரியா தெரிவித்தார்.






மேலும், விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டின் அதிபர் குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்துள்ளார். மேலும், இதற்கான காரணங்கள் கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கிடையில் கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.




மேலும் படிக்க


Congo : காங்கோவில் பதற்றம்...அலறிய மக்கள்...பயங்கரவாத தாக்குதலால் 22 பேர் பலி!


அதிகாலை 1 மணிவரை வீடியோ கேம்: சரியான பாடம் புகட்டிய தந்தை: கதறி அழுது மனம் மாறிய மகன் - நடந்தது என்ன?