துருவப் பகுதிகளில் குறைவான வெப்பத்தை இழப்பதற்காக  பெரிய உடல்கள் கொண்ட மனிதர்கள் தோன்றியதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.   

  


300 க்கும் மேற்பட்ட பழங்கால மனிதர்களின் உடல் மற்றும் மூளை  புதைபடிவங்களை ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த மில்லியன் ஆண்டுகளில், மனித உடல் ஒரே அளவாய் இல்லை என்றும், கால சூழலுக்கேற்ப ஏற்ற மாற்றம் பெறத்தக்க வகையில் உள்ளன என்றும் கண்டறிந்துள்ளனர். உதாரணமாக, துருவப் பகுதிகளில் காணப்படும் குளிர்ந்த வெப்பநிலையை சமாளிக்கும் விதமாக பெரிய உடல் அமைப்பு தோன்றியிருக்கலாம் என மதிப்பிட்டுள்ளனர். பெரிய பரப்பளவில் வெப்பம் மிகவும் குறைவாக வெளியாகிறது/


ஹோமோ சேப்பியன்ஸ், ஆப்பிரிக்காவில் சுமார் 3,00,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. இருப்பினும், ஓமோ பேரினத்துக்குள் நியண்டர்தால்கள், ஹோமோ எரெக்டஸ் உள்ளிட்ட இனமானது நீண்ட காலமாக உள்ளது. ஓமோ பேரினத்தில் தப்பியிருக்கும் ஒரே இனம் ஓமோ சேப்பியன்ஸ். 24, 000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் நியண்டர்தால் மனிதன் அழிந்துபோனதாக கூறப்படுகிறது. நன்கு நிமிர்ந்து நடந்த ஹோமோ எரெக்டஸ் ( Homoerectus) என்னும் மனித இனச் சான்றுகள் ஜாவா தீவில் கிடைத்துள்ளன.




 


 


ஆரம்பகால ஹோமோ ஹபிலிஸ் மனித இனத்தோடு ஒப்பிடுகையில், சேப்பியன்ஸ் 50% கூடுதல் கனம் பொருந்தியதாகவும், மூன்று மடங்கு மூளையளவு பெரியதாகவும் உள்ளது. எனவே, உடல்வடிவமைப்பு மற்றும் மூளையின் அளவை அதிகரிக்கும் போக்கு மனிதஇனத்தின் பரிணாம வளர்ச்சியை வரையறுக்கும் பண்புகளில் ஒன்றாக உள்ளது என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், இத்தகைய மாற்றங்களுக்குப் பின்னால் உள்ள காரணங்கள் இன்றளவும் விவாதத்திற்கு உட்பட்டதாக உள்ளது என்றும் தெரிவித்தனர்.


கடந்த மில்லியன் ஆண்டுகளாக உடல் அளவு மாற்றங்களில்  காலநிலை மாற்றம், குறிப்பாக புவிவெப்பமயமாதலின் தாக்கங்கள் அதிகமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். மூளையின் அளவை தீர்மானிப்பதில் சுற்றுச்சூழல்/சுற்றுச்சூழல் அற்ற காரணிகளின் பங்கு குறித்தும் மதிப்பிட்டுள்ளனர். எவ்வாறாயினும், பரிணாம வளர்ச்சியில் மிகவும் சிக்கலான பணிகளை (வேட்டையாடுதல்) மேற்கொள்ளும் போது மூளையளவு பெரிதாகும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


மனித உடல் மற்றும் மூளையின் அளவு தொடர்ந்து பரிணாமம் பெற்று வருகிறது. மனித உடலமைப்பு இன்னும் வெவ்வேறு வெப்பநிலைகளுக்கு ஏற்ப மாறிவருகிறது.குளிர் பகுதிகளில் வாழும் மனிதர்களின் உடல்கள் பெரிதாக உள்ளது. தற்போதைய மனித இனத்தின் மூளை அளவு சுமார் 11,650 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனித இனத்தை விட குறைந்து காணப்படுகிறது என்றும் ஆய்வில் தெரிவிக்கப்படுகிறது.


மேலும் படிக்க: 


Climate changed the size of our bodies and, to some extent, our brains - University of Cambridge


World Population Day 2021 | மக்கள் தொகையைப் பொறுத்தவரை, தமிழ்நாடு சந்திக்க இருக்கும் சவால்கள் என்ன?