சீனாவில் உள்ள க்ரேன் தயாரிப்பு நிறுவனம் ‘Henan Mine' ரூ. 70 கோடி பணத்தை தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கியதாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ வைரலாகி வருகிறது. 


வேலைக்கு செல்லும் அனைவருக்கும் போனஸ்,இங்க்ரிமெண்ட் என்பதெல்லாம் மகிழ்ச்சியையும் ஊக்கத்தை ஏற்படுத்தும் ஒன்று. அப்படியிருக்க, சீனாவில் உள்ள ஒரு நிறுவனம் ஆண்டு மீட்டிங்கில் தொழிலாளர்களுக்கு தேவையான அளவு போனஸ் எடுத்துக்கலாம் என்று பணத்தை மேஜை மீது வைத்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. 


சீனாவில் Henan Mining Crane & Co என்ற க்ரேன் தயாரிகும் நிறுவனம் ஜனவரி 29 ஆம் தேதி நடைபெற்ற மீட்டிங்கில் தனது ஊழியர்களுக்கு போனஸ் வழங்க புதிய நடைமுறையை பின்பற்ற முடிவு செய்தது. அதன்படி, ஒரு மேஜையில் பணத்தை வைத்துவிட்டு ஊழியர்களை எவ்வளவு போனஸ் வேண்டுமோ எடுத்துக்கோங்க என்று சொல்லிவிடலாம் என்ற முறையில் ஒரு விளையாட்டை திட்டமிட்டுள்ளது. 






போனஸ் விளையாட்டு:


சிங்கப்பூர் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் போனஸ் விளையாட்டு பற்றிய செய்தி வெளியாகி இருந்தது. அதில், தொழிலாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் போனஸ் வழங்குவதை ஒரு விளையாட்டாக நடத்தலாம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சீன யுவான் 100 மில்லியன் பணத்தை ஆண்டு போனஸாக கொடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. 


ஊழியர்கள் மேஜையில் வைக்கப்பட்டுள்ள பண நோட்டுகளுடன் இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அதில், 60-70 கிமீ நீளமுள்ள மேஜை மீது சீன யுவான் வைக்கப்பட்டுள்ளது. 30 பேர் கொண்டு குழுக்களாக ஊழியர்கள் பிரிக்கப்பட்டனர். 30 பேர் கொண்ட குழுவில் இருந்து இருவர் விளையாட்டில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர். இருவரும் மேஜை மீது உள்ள பணத்தை வேகமாக எண்ண வேண்டும். எவ்வளவு பணம் எண்ணி எடுக்கிறார்களோ அது அவர்களுக்கு. 15 நிமிடங்களுக்குள் எவ்வளவு பணத்தை எடுத்து எண்ணி முடிக்க முடியுமோ அதை செய்ய வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர்கள் எடுக்கும் பணம் மட்டுமே அவர்களுக்கு. அதை அவர்கள் 30 பேருடன் பகிர்ந்துகொள்வர் என்பது விளையாட்டின் விதி.


விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற இருவரையும் பாராட்டும் விதமாக வெற்றி பெற்ற தொகையில் கூடுதலாக ரூ.1,200 (100 yuan) கொடுக்கப்பட்டுள்ளதாக சீன செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.  இந்தப் போட்டியில்  ஒரு ஊழியர் ரூ.12 லட்சம் (100,000 yuan) எடுத்து லட்சாதிபதி ஆகியுள்ளார். 


இந்த வீடியோவைப் பார்த்த பலரும் தங்களது கருத்துகளை பகிந்து வருகின்றனர். அதில் ஒருவர், “ சரியாக பணத்தை எண்ணவில்லை என்றால் அவ்வளவுதான்..” என Squid games வெப் சீரிஸ் உடன் ரிலேட் செய்து கமெண்ட் செய்துள்ளார்.


இந்த வீடியோ சமூக வலைதளங்களில் 1.8 மில்லியல் பார்வையாளர்களை கடந்துள்ளது. ஜனவரி, 26 பகிரப்பட்ட இந்த வீடியோ இன்னும் சமூக வலைதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.