சீன நாட்டின் அதிபராக 3வது முறையாக ஜி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சீன அதிபராக அந்நாட்டின் ஒற்றை அரசியல் கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி, சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு சமீபத்தில் நடந்தது. இதில், மீண்டும் சீனாவின் அதிபராக ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டார். நேற்று (மார்ச் 9) நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் முடிவெடுக்கப்பட்டது. 


சீன கம்யூனிஸ்ட் கட்சி ஜி ஜின்பிங்கை ஒருமனதாக தேர்வு செய்ததோடு, மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் தேர்வு செய்தது. இதையடுத்து, சீன நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் அதிபராக உறுதிமொழி ஏற்று ஸி ஜின்பிங் பதவியேற்று கொண்டார். முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநட்டில் கட்சியின் பொது செயலாளராக ஜி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஒருவர் இருமுறை மட்டுமே அதிபராக இருக்கு முடியும் என்ற விதிமுறை கடந்த 2018ம் ஆண்டு நீக்கப்பட்டது. இதையடுத்து சீன வரலாற்றில் 3வது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் ஜி ஜின்பிங்தான். அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஜி ஜின்பிங்தான் சீனாவின் அதிபராக தொடர்வார்.