10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சீனா மேற்கொள்ளும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1950-ஆம் ஆண்டுக்கு பிறகு கடந்த 10 ஆண்டுகளில் சீனாவின் மக்கள் தொகை பெருக்கம் குறைந்துள்ளது. சீனா வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, திருமணமான இருவர் இனி 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன அரசின் மிக பெரிய கொள்கை மாற்றமாக இது பார்க்கப்படுகிறது, இதற்கு முன்பாக சீனாவில் 2 குழந்தைகள் மட்டுமே ஒரு தம்பதி பெற்று கொள்ள முடியும் என்ற விதி இருந்து வந்தது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி, பிறப்பு விகிதம் குறைந்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
சீன செய்தி நிறுவனம் Xinhua வெளியிட்டுள்ள செய்தியின் படி, அண்மையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டு ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்ற கொள்கையை சீனா திரும்ப பெற்றிருந்தது.
இந்நிலையில் மேலும் "குழந்தை பிறப்பு விகிதத்தை மேன்படுத்தும் வகையில், ஒரு தம்பதி 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாம் என கொள்கை முடிவு" ஆலோசனை கூட்டம் குறித்து Xinhua செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்கை முடிவு மாற்றத்துடன், மேலும் சில ஆதரவு அறிவிப்புகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் மக்கள் தொகையை பெருக்கும் வகையிலான கட்டமைப்பு ஒரு பக்கம் உருவாக்கப்பட்டு, அதே நேரம் சீனாவின் வயதானவர்களின் மக்கள் தொகையுடன் ஈடாகும் வகையில் வியூகம் ஏற்படுத்தப்படும். மனித வளம் இதனால் மேன்மையடையும் வகையில் சீனாவின் கொள்கைகள் வகுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.