தைவானில் சீன கொடி :
1949 ஆம் ஆண்டு சீனாவில் ஏற்பட்ட உள்ளூர் போர் காரணமாக , தைவான் சீனாவிடம் இருந்து பிரிந்து தனி நாடாக உருவானது. ஆனால் பிரிந்த நாள் முதலே தைவானை சீனாவுடன் இணைக்கும் முயற்சியும் பல்வேறு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் அமெரிக்க சபாநாயகர் தைவான் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா , தைவான் எல்லைக்குள் போர் விமானங்களை பறக்கவிட்டு அச்சுறுத்தும் செயலில் ஈடுபட்டது. இந்த நிலையில் தைவானின் அரசு தளங்களை ஹேக் செய்து சில மர்ம நபர்கள் சீன கொடியை பறக்கவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீன ஹேக்கர்ஸ் :
சீனாவின் அரசு இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்ட நிலையில் Kaohsiung அரசாங்க இணையதளம் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் இருந்து சனிக்கிழமை காலை வரை கிட்டத்தட்ட 10 மணி நேரத்திற்கும் மேலாக சீன கொடியுடன் இருப்பதை பார்க்க முடிந்தது.வெள்ளிக்கிழமை காலை (ஆக. 5), தைவானின் வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளம் ஆகஸ்ட் 2, 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சில மணிநேரங்களுக்கு செயலிழந்ததாக அந்நாட்டு அமைச்சகம் தெரிவித்திருந்த நிலையில் அதுதான் சர்வரை செயலிழக்க செய்த நேரம் என்கிறது தைவான் அரசு. சீன மற்றும் ரஷ்ய ஐபி முகவரிகளிலிருந்து நிமிடத்திற்கு 17 மில்லியன் முறை அணுகல் முயற்சிகள் நடைப்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல் :
இதன் விளைவாக, தீங்கிழைக்கும் இணையச் செயல்பாடுகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.வெள்ளிக்கிழமை முதல் திங்கள் கிழமை (ஆக. 8) மதியம் வரை ஒவ்வொரு மணி நேரமும், இணையதளங்களில் tabs on முறையில் வைத்திருக்கவும், ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் உடனடியாக அமைச்சரவைக்கு தெரிவிக்கவும் மத்திய அரசு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சில நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே போல அந்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் சைபர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அவசரகால பதிலளிப்பு வழிகாட்டுதல்களை அந்நாட்டு அரசு வழங்கியுள்ளது. ஒவ்வொரு பள்ளி இணையதளத்தையும் 24 மணிநேர பாதுகாப்பு கண்காணிப்புடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது வருகிற திங்கள் கிழமை வரை தொடர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.