வடகிழக்கு சீனாவில் ஒரு உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். இருப்பினும், தீ விபத்துக்கான காரணம் குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, லியோனிங் மாகாணத்தின் லியோயாங் நகரில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் மதியம் 12:25 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறுகையில், “காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவும், காரணத்தை தாமதமின்றி விசாரிக்கவும், தவறு செய்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கையை உறுதி செய்யவும் உள்ளூர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக” தெரிவித்தார்.