Watch Video: ஆத்தி..! களேபரமான நாடாளுமன்றம், கண்ணீர் புகை குண்டுகள், திக்குமுக்காடிய எம்.பிக்கள், வீடியோ வைரல்
Watch Video: செர்பியா நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கூச்சல் குழப்பம் தொடர்பான வீடியோ இணையதில் வைரலாகியுள்ளது.

Watch Video: செர்பியா நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கண்ணீர் புகை குண்சுகளை வீசியதால், அப்பகுதி களேபரமாக மாறியது.
களேபரமான நாடாளுமன்றம்:
செர்பிய நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை அசாதாரண காட்சிகளைக் கண்டது. கூட்டத்தொடரின் தொடக்க நாளில், எம்.பி.க்கள் தீப்பிழம்புகளை (ஃப்ளேர்ஸ்) ஏற்றி, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதனால் கட்டிடம் புகையால் நிரம்பியது.
செர்பிய முற்போக்குக் கட்சி (SNS) தலைமையிலான ஆளும் கூட்டணி நிகழ்ச்சி நிரலை அங்கீகரித்த பின்னர், செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த சம்பவம் நடந்தது. சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் நாடாளுமன்ற சபாநாயகர் அனா பிரனாபிக்கை நோக்கி, தங்கள் இருக்கைகளில் இருந்து ஓடிச்சென்றபோது, தடுத்த பாதுகாப்புக் காவலர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டனர்.
கண்ணீர் புகை குண்டுகளை வீசிய எம்.பி.,க்கள்:
நேரடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த காட்சிகளில், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஃப்ளேர்களையும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி, அவையை கருப்பு மற்றும் இளஞ்சிவப்பு புகையால் நிரப்புவதைக் காட்டியது. எதிர்க்கட்சியின் போராட்டத்தை சபாநாயகர் கடுமையாக சாடியதை ஒரு நேரடி வீடியோ காட்டியது. அதில், "உங்கள் வண்ணப் புரட்சி தோல்வியடைந்தது, இந்த நாடு வாழும்; இந்த நாடு செயல்படும், இந்த நாடு தொடர்ந்து வெற்றி பெறும்" என சபாநாயகர் பேசியுள்ளார்.
எதற்காக இந்த போராட்டம்?
ஊழல் எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கலவரத்தில் இரண்டு எம்.பி.க்கள் காயமடைந்தனர், முன்னதாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக சபாநாயகார் கூறினார். "பாராளுமன்றம் தொடர்ந்து பணியாற்றும் மற்றும் செர்பியாவைப் பாதுகாக்கும்," என்று அவர் அமர்வில் கூறினார்.