அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் இந்திய உணவகம்... நம்பர் 1 ஆக தேர்வு செய்த மக்கள்
தமிழரின், இந்தியனின் உணவு பெருமை நாடு கடந்து பல மக்களின் பேவரைட்டாக உள்ளது. இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நம் ஊர் உணவின் கை மணத்தை ருசிக்காமல் செல்வதில்லை.

அமெரிக்காவில் இந்திய உணவகம் ஒன்று சிறந்த உணவகம் என்ற பிரிவில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
என்னதான் நாம் வெளியூர், வெளிநாடு என சென்றாலும் நம் மண்ணின் உணவு சார்ந்த விஷயங்களை எங்கு கண்டாலும் நம்மை அறியாமல் ஒரு மகிழ்ச்சி பிறக்கும். தமிழரின், இந்தியனின் உணவு பெருமை நாடு கடந்து பல மக்களின் பேவரைட்டாக உள்ளது. இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நம் ஊர் உணவின் கை மணத்தை ருசிக்காமல் செல்வதில்லை.
Just In




அதேபோல் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு சென்று உணவு உட்பட அனைத்து துறைகளிலும் இந்திய மக்கள் சாதனைப் படைத்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய உணவை அடிப்படையாக கொண்ட உணவகம் ஒன்று அமெரிக்காவில் அசத்தியுள்ளது. சிகாகோவில் உள்ள ஜேம்ஸ் பியர்ட் அறக்கட்டளை ஒன்று ஒவ்வொரு மாகாணத்திலும் சிறந்த உணவகம், சிறந்த சமையல்காரர், சிறந்த புதிய உணவகம், வளர்ந்து வரும் சமையல் காரர், சிறந்த பேக்கர், சிறந்த பேஸ்ட்ரி செஃப், சிறந்த ஒயின், சிறந்த பார் போன்ற பிரிவுகளிலும் விருது வழங்கப்பட்டது.
கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த இந்த விருது வழங்கும் விழாவில் அமெரிக்காவின் சிறந்த உணவகமாக வட கரோலினாவில் மலிவு விலையில் இந்திய உணவுகளை வழங்கும் சாய் பானி தேர்வு செய்யப்பட்டது. டீ மற்றும் தண்ணீரின் அடையாளமாக பெயரிடப்பட்ட சாய்பானி உணவகத்தில் காரம், இனிப்பு மற்றும் கசப்பு சுவைகளை கொண்ட சாட் வகைகள் இடம் பெற்றுள்ளது.
அதேபோல் சிறந்த புதிய உணவகமாக தேர்வு செய்யப்பட்ட மினியாபோலிஸில் உள்ள பூர்வீக அமெரிக்க உணவகமான ஓவாம்னியில் பணியாற்றும் ஊழியர்கள் 75% பழங்குடியினர் என்பது சிறந்த விஷயமாக அமைந்தது. மேலும் பாலைவனத்தில் வளரத் தக்க விதைகளைக் கொண்ட பழங்கால தானியங்களைப் பயன்படுத்தி உணவு தயாரிக்கும் அரிசோனா மாகாணத்தின் டான் குவேரா சிறந்த பேரியோ ரொட்டி பேக்கராக தேர்வு செய்யப்பட்டார். நாடு கடந்து அசத்தி வரும் சாய்பானி உணவகத்திற்கு சமூக வலைத்தளத்தில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்