மழை காலங்களில் பெரும்பாலும் வாகனம் ஓட்டுபவர்கள் மிகவும் சிரமமான சூழல் இருக்கும். அதிலும் குறிப்பாக மழை பெய்து சாலையில் நீர் தேங்கி இருந்தால் அவர்களுக்கு அது மிகவும் சிக்கலாம அமையும். இப்படி இருக்கும் சூழலில் மழையுடன் சேர்ந்து மின்னல் வந்தால் அது மேலும் இடையூராக அமையும். அப்படி ஒரு பகுதியில் மழையுடன் சேர்ந்து மின்னல் வந்தபோது கார் ஒன்று தாக்கப்பட்டுள்ளது. அங்கு நடந்தது என்ன?


அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கடுமையான மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. அப்போது ஒரு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது மின்னல் தாக்கியுள்ளது. இதன் காரணமாக கார் ஓடாமல் அப்படியே நின்றுள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்தக் கார் தீ பிடிக்கவில்லை. இதனால் அந்த காரில் பயணம் செய்த 5 பேரும் உயிர் தப்பினர். இந்த நிகழ்வை பின்னால் சென்ற காரில் இருந்து ஒருவர் வீடியோ பதிவு செய்துள்ளார். 


 






அந்தப் பதிவை அவர் சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அதன்படி அந்த காரில் 3 வயது, ஒன்றரை வயது மற்றும் 8 மாத குழந்தைகள் உடன் ஒரு தம்பதி சென்று தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும் எந்தவித காயமும் இல்லாமல் உயிர் தப்பியுள்ளனர். மேலும் இந்தச் சம்பவத்தின் போது அவர்களின் கார் செயல்படாமல் நின்றதால் அவர்கள் மிகவும் பதட்டமாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. அத்துடன் இந்த வீடியோவை பதிவை பார்த்து பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 


 






இந்த வீடியோவை பார்த்த பலரும் அவர்கள் உயிர் தப்பியது பெரிய அதிர்ஷ்டம் என்று கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம் குருகிராம் பகுதியில் மின்னல் தாக்கி மரத்திற்கு அருகே நின்று கொண்டிருந்த மூன்று பேர் உயிரிழந்த வீடியோ வெளியானது. அந்த வீடியோவும் மிகவும் வைரலானது. தற்போது அதை தொடர்ந்து மீண்டும் ஒரு மின்னல் தாக்கும் வீடியோ வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: 15 வயது பேத்தியை 50 வயது ஆணுக்கு திருமணம் செய்த பாட்டி கைது !