கனடா அரசின் தீவிர கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெருந்திரளான மக்கள் நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும்,அவரது குடும்ப உறுப்பினர்களும் மறைவான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பெருந்தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு உலகின் பல்வேறு நாடுகளும் தடுப்பூசியை தவறாமல் செலுத்திக் கொள்வதை கட்டாயமாக்கி வருகின்றனர். அதே வகையில், கனடா அரசு சில தினங்களுக்கு முன்பு கொரோனா தடுப்பு வழிமுறைகளை வெளியிட்டது. அதில், அனைத்து மக்களும் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும், ட்ரக் ஓட்டுநர்கள் ஒரு மாகாணத்திலிருந்து, இதர மாகாணத்திற்குச் செல்லவும், சர்வதேச எல்லையைக் கடக்கவும் 100% தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.
அரசின் இந்த நிபந்தனைகள் யாவும், அடிப்படையான உரிமைகளை மறுதலிப்பு செய்கிறது, தடுப்பூசியை வேண்டாம் என்று சொல்லும் (Right To Refuse) உரிமையை அரசு மதித்து நடக்க வேண்டும் என்று கோரிக்கையுடன் ஆயிரக்கணக்கான டிரக் ஓட்டுனர்கள் தங்கள் வாகனங்களுடன நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட ஆர்ம்பித்தனர்.
டிரக் ஓட்டுனர்களின் போராட்டமாக இருந்துவந்த நிலையில், தற்போது இது வெகுஜனப் போராட்டமாக மாறியுள்ளது. எதிர்க்கட்சிகளும், கருத்தியியல் ரீதியாக மாற்று நிலைப்பாடு கொண்ட பல்வேறு சமூகக் குழுக்களும், அடிப்படைவாதம் பேசும் மக்களும் இந்த போராட்டத்தில் இணைந்து வருகின்றனர். போராட்டக்காரகளின் எண்ணிக்கை மட்டும் 10,000ஐத் தாண்டும் என்று மதிப்பிடப்படுகிறது. போர் நினைவுச் சின்னம் மற்றும் இன்னபிற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சேதப்படுத்தி வருகின்றனர்.
அதே சமயம், போராட்டக்காரர்களுக்கு எதிரான கருத்துகளையும் சிலர் பதிவிட்டு வருகின்றனர். அந்நாட்டின் முப்படைத் தளபதியான வாய்னே எய்ரே(Wayne Eyre) தனது ட்விட்டர் பதிவில், " அடையாளம் காணமுடியாத படை வீரர் ஒருவரின் கல்லறையில் நடனமாடுவதையும்,தேசிய போர் நினைவிடத்தை இழிவுபடுத்துவதையும் கண்டு நான் மிகவும் வேதனை கொள்கிறேன். பேச்சு சுதந்திரத்தைக் காக்க நமது முன்னோர்கள் போராடி மடிந்தனர். உங்களது போராட்டம் சுதந்திரத்தைப் பற்றியவர்கள். இத்தகைய செயலிலி ஈடுபட்டவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்" என்று பதிவிட்டார்.
இந்த போராட்டம் விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படா விட்டால், விரைவில் கலவர சூழல்கள் ஏற்படக் கூடும் என்பதை உணர்ந்த காவல்துறையினர் விசயத்தைக் கட்டுக்குள் கொண்ட வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.