கனடிய பாட்டி ஒருவர் ஒரு மணி நேரத்தில் 1,500 புஷ் அப்களை செய்து இரண்டாவது உலக சாதனையை படைத்துள்ளார். 


பலர் தங்கள் தாத்தா பாட்டியை ஹீரோக்களாக நினைக்கிறார்கள். ஆனால் கனடாவைச் சேர்ந்த டோனாஜீன் வைல்டினின் பேரக்குழந்தைகள் தங்கள் பாட்டி ஒரு சூப்பர் ஹீரோ என்று அதிகாரப்பூர்வமாக சொல்ல முடியும். அப்படி ஒரு சாதனையைத்தான் டோனாஜீன் படைத்துள்ளார்.


59 வயதான அவர் கடந்த வாரம் 60 நிமிடங்களில் 1,575 புஷ் அப்களை முடித்ததன்மூலம் தனது இரண்டாவது உலக சாதனையை படைத்துள்ளார்.


ஒவ்வொரு புஷ்அப்பிற்கும் புஷ்அப்பின் அடிப்பகுதியில் 90 டிகிரி முழங்கை வளைவு மற்றும் மேலே தள்ளும் போது முழு கை நீட்டிப்பு தேவை என்ற நிபந்தனைகளுடன் இந்த சாதனையை படைத்துள்ளார். அவர் முந்தைய புஷ்அப் சாதனையை 17 நிமிடங்களுக்கு முன்னதாக முறியடித்துள்ளார். டோனாஜீன் தனது முதல் சாதனைப் பட்டத்திற்கான தீவிரப் பயிற்சி தனது இரண்டாவது முறைக்கு உதவியதாகக் கூறுகிறார் 


ராக்கி மலைகளின் அடிவாரத்தில் உள்ள ஆல்பர்ட்டாவின் பீசரில் உள்ள தனது குடும்பத்தின் அழகிய வீட்டில் அவர் இந்த சாதனையை செய்துள்ளார். 




இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நான் இன்னும் வலுவாக உணர்ந்தேன். அடுத்த 17 நிமிடங்களில் அதிக எண்ணிக்கையிலான புஷ் அப்களை முடிக்க இலக்கு வைத்துள்ளேன்" எனத் தெரிவித்தார். 


இந்த சாதனையை தொடங்கியபோது ஆவரது 12 பேரக்குழந்தைகளில் 11 பேர் அவரை உற்சாகப்படுத்தினர். அப்போது  "என் பாட்டி அதிகாரப்பூர்வமாக அற்புதமானவர்" என்று கையால் செய்யப்பட்ட போஸ்டரும் அங்கே வைக்கப்பட்டிருந்தது. 


முதல் 20 நிமிடங்களில் 620 புஷ் அப்களை முடித்தநிலையில். அடுத்து சில நிமிடங்களில் முந்தைய சாதனையை முறியடித்து, நேரம் முடிவடையும் வரை ஒரு சில நிமிடங்களுக்கு சராசரியாக 10 புஷ் அப்களை எடுத்து முடித்தார். இதற்கு முன் ஒருமுறை உலக சாதனையை வென்றிருந்தாலும், வாழ்நாள் முழுவதும் தடகள வீராங்கனையாக, சாதனைகளைக் கொண்டாட நேரத்தை ஒதுக்குவதன் முக்கியத்துவத்தை டோனாஜீன் அறிவார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அவரது சாதனைக்கு பிறகு, அவர் புகைப்படங்களை எடுத்து உற்சாகமான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் உரையாடி மகிழ்ந்தார்.