Burmese Python: மலைப்பாம்பின் வலிமை குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


மலைப்பாம்பு:


மலைப்பாம்பு பாம்பு இனங்களில் மிகப்பெரியதாகும். மற்ற பாம்புகளை போன்று அவை விஷத்தன்மை கொண்டவை அல்ல, ஆனால் இரையைப் பிடித்து விழுங்குவதன் மூலம் அவற்றைக் கொல்லும். சிறுவயதில், மலைப்பாம்பு மனிதனையே முழுமையாக விழுங்கும் என்பது போன்ற பல கதைகளை நாம் கேட்டிருப்போம். ஆனால் இது உண்மையில் நடக்குமா? பர்மிய மலைப்பாம்பு எவ்வளவு பெரிய விலங்கை விழுங்க முடியும்? என்பன போன்ற விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.


பர்மிய மலைப்பாம்புகள் எவ்வளவு பெரியவை?


பர்மிய மலைப்பாம்பு (Python bivittatus) என்பது தென்கிழக்கு ஆசியாவின் வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படும் ஒரு பெரிய பாம்பு ஆகும். இந்த மலைப்பாம்பு சராசரியாக 3 முதல் 4 மீட்டர் (10 முதல் 13 அடி) நீளம் கொண்டது. ஆனால் சில பர்மிய மலைப்பாம்புகள் 6 மீட்டர் வரை அதாவது சுமார் 20 அடி வரை வளரும். பர்மிய மலைப்பாம்பின் எடையைப் பற்றி பேசினால், அது 90 கிலோ வரை இருக்கும். இப்போது அந்த மலைப்பாம்பு மனிதனையும் வேட்டையாடுமா என்ற கேள்வி எழுகிறது.






மலைப்பாம்பால் மனிதனை வேட்டையாட முடியுமா?


சமீபத்தில், பர்மிய மலைப்பாம்பின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், 52 கிலோ மற்றும் சுமார் 14.8 அடி நீளமுள்ள பெண் பர்மிய மலைப்பாம்பு மானை விழுங்குவதைக் காணலாம். இந்த மானின் எடை சுமார் 35 கிலோ இருந்தது. அதன் விளைவாக ஒரு மலைப்பாம்பு மனிதனையும் விழுங்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


நிபுணர்களின் கூற்றுப்படி, பர்மிய மலைப்பாம்பு 14 முதல் 15 அடி நீளம் இருந்தால், அது 4 முதல் 5 அடி உயரமுள்ள மனிதனை விழுங்கும். ஊர்வன மற்றும் ஆம்பிபியன்ஸ் இதழின் நிபுணர்களின் கூற்றுப்படி, பர்மிய மலைப்பாம்பு ஒரு பெரிய விலங்கை விழுங்கும்போது, ​​அது அதன் தாடைகளை 90 சதவீதத்திற்கும் அதிகமாக விரிவுபடுத்துகிறது. மான் விஷயத்தில், பர்மிய மலைப்பாம்பு அதன் தாடைகளை 93 சதவீதம் விரிவுபடுத்துவதாக கூறப்படுகிறது.


மலைப்பாம்பு இரையை விழுங்குவது எப்படி?


மலைப்பாம்பு பற்றி கூறப்படுவது, அதன் இரை பெரியதாக இருந்தால், அதை விழுங்குவதற்கு முன்பு அதை தனது பிடியில் இறுக்கி பிடிக்கும். இதனால் பெரிய உயிரினத்தை விழுங்குவதற்கு முன்பு அதைக் கொல்ல முடியும் மற்றும் அதன் எலும்புகளை உடைக்க முடியும். அதன் காரணமாக இரையை விழுங்குது எளிதாகிறது. இருப்பினும், ஒரு பெரிய மனிதனை மலைப்பாம்பு விழுங்கியது போன்ற ஒரு சம்பவங்கள் பற்றி அடிக்கடி கேள்விபடுவதில்லை. ஆனால் குழந்தைகள் தொடர்பாக பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.