உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் ரஷ்யாவை யாராலும் தடுக்க முடியாது என்றும், அதிபர் புதின் உலகை ஆள்வார் என்றும் பாபா வாங்காவின் (Baba Wanga) கணிப்பு வைரலாகி வருகிறது.
பல்கேரியன் நாட்டை சேர்ந்த பெண் பாபா வாங்கா. பாபா வாங்கா பல்கேரிய நாஸ்டர்டாமாக கருதப்படுகிறார். பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா 12 வயதில் சூறாவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தவர். இவருக்கு எதிர்காலத்தைக் கணிக்கும் திறன் இருக்கிறது. 84 வயதில் பாபா வங்கா காலமானார். அவருடைய வாழ்நாளில் அவர் கணித்த 85 சதவீத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அமெரிக்காவின் 9/11 வர்த்தக கோபுர தாக்குதல், 2022ம் ஆண்டு புதுவித வைரஸ் தாக்குதல் ஏற்படும், என பல விஷயங்களை முன்கூட்டியே கணித்துள்ளார்.
இந்நிலையில் எழுத்தாளர் வாலண்டின் சிடோரோவிடம் தெரிவித்திருந்த கணிப்பு உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாபா வங்கா இறப்பதற்கு முன்பு தெரிவித்த கணிப்புகளின் படி, ரஷ்யா உலகின் வல்லரசாக மாறும் என்பது போன்றவைகளை கணித்துள்ளார். அத்துடன் அமெரிக்காவின் 44-வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர் பதவி ஏற்பார், 2016-ஆம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் வலிமை பெறும் எனவும் கணித்தார். இதைத் தொடர்ந்து தன்னுடைய குடிமக்கள் மீது சிரியா ஜனாதிபதி ரசாயன தாக்குதலை நடத்துவார் என்றும் பாபா வாங்கா கணித்தார். அதுவும் நடந்தது. இப்படி இவர் கூறும் விஷயங்களில் பல நடந்துள்ளதால், இவருடைய கணிப்பு பரவலாக பேசப்படுகிறது.
குறிப்பாக ஐரோப்பா அதன் தற்போதைய வடிவத்தில் இருக்காது என்று அவர் கணித்திருந்தார். அதன்பின்னர், 2016ம் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது.
ஆகஸ்ட் 1999ல் ரஷ்ய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான குர்ஸ்க் கடலில் மூழ்கும் என்றும், டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதையும் கணித்திருந்தார்.
பாபா வங்கா குறித்து எழுத்தாளர் வாலண்டைன் சிடோரோவிடம் கூறுகையில், எல்லாம் பனிக்கட்டி போல உருகிவிடும். ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் நிலைத்திருக்கும். அது விளாடிமிரின் மகிமை, ரஷ்யாவின் மகிமை. அதனை யாராலும் தடுக்க முடியாது, ரஷ்யா உலகின் அதிபதி ஆகிவிடும் என பாபா வாங்கா கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்யா உலக நாடுகளை தன் வசப்படுத்தும் நாடாக மாறும். ஐரோப்பா ஒன்றும் இல்லாத நாடாக மாறும் என்றும் வாங்கா கணித்திருந்தார்.
பாபா வாங்கா 5079 ஆம் ஆண்டு வரை உலகில் என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து கணித்து வைத்துள்ளார். இவருடைய கணிப்புகள் மீது மக்களுக்குத் தனி நம்பிக்கை உண்டு.