பிரிட்டன் மகாராணியாக ராணி இரண்டாம் எலிசபெத் பதவியேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அங்கு கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளன. 


லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் வசித்து வரும் ராணி எலிசபெத் தந்தை ஆறாம் ஜார்ஜ் மறைவுக்குப் பின் 1952 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி முடிசூட்டிக் கொண்டார். இவர்தான் பிரிட்டனை ஆண்டவர்களில் அதிக ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர். இவருக்கு அடுத்தப்படியாக 63 ஆண்டு கால ஆட்சி புரிந்தவராக விக்டோரியா மகாராணி உள்ளார். 


#NTAdeferNEETUG:2022 நீட் இளங்கலைத் தேர்வை ஒத்திவையுங்கள்- வலுக்கும் கோரிக்கை


ராணி எலிசபெத் பதவியேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் நேற்று முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.


ராணியின் பிறந்தநாளில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ட்ரூப்பிங் தி கலர் என்ற இராணுவ அணிவகுப்புடன் கொண்டாட்டங்கள் நேற்று தொடங்கியது. சுமார் 1,500 வீரர்கள் இராணுவ இசைக்கு அணிவகுத்துச் சென்றனர். இதேபோல் ராயல் விமானப்படை சார்பில் வானில் சிவப்பு, வெள்ளை, நீல வண்ணங்களை உள்ளடக்கிய சாகசம் நடைபெற்றது. டஸ்கி டூவ் ப்ளூ உடையை அணிந்திருந்த ராணி இரண்டாம் எலிசபெத் பொதுமக்களிடையே தோன்றினார். 




மேலும் ராணுவ அணி வகுப்பின் போது லண்டன் தெருக்களில் கூடியிருந்த பொதுமக்களை பார்த்து கையசைத்தவாறு அவர் சென்றார். முதல் நாள் நிகழ்ச்சியின் போது ராணியின் இரண்டாவது மகன் இளவரசர் ஆண்ட்ரூ உட்பட சில குடும்ப உறுப்பினர்கள் ஆஜராகவில்லை. அதேசமயம் ராணியின் பவளவிழாவை முன்னிட்டு இந்தியாவின் மும்பையில் நடைபெறும் திருமணத்தின் கலாச்சார பின்னணியில் பிளாஸ்டிக் சேலை உருவாக்கப்பட்டுள்ளது. 


நிகழ்ச்சியின் இறுதி நாளில் 150க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பேரணி நடைபெறவுள்ளது.இந்த கொண்டாட்டங்களால் லண்டன் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


#NTAdeferNEETUG:2022 நீட் இளங்கலைத் தேர்வை ஒத்திவையுங்கள்- வலுக்கும் கோரிக்கை