பிரிட்டன் இளவரசரும், மன்னர் சார்லஸின் தம்பியுமான ஆண்ட்ரூ, பாலியல் புகாரில் சிக்கிய நிலையில், அவரது பட்டங்களை பறிப்பதற்கான முறையான நடவடிக்கைகளை மன்னர் சார்லஸ். அது மட்டுமல்லாமல், ஆண்ட்ரூ வசித்துவரும் வின்ட்சர் இல்லத்தை காலி செய்யவும் பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிக்கை வெளியிட்டுள்ளது. ஆண்ட்ரூ மீதான இந்த நடவடிக்கை ஏன்.? பார்க்கலாம்.

Continues below advertisement


இளவரசர் ஆண்ட்ரூ மீதான பாலியல் புகார்


அமெரிக்காவைச் சேர்ந்த வர்ஜீனியா கியூப்ரே என்ற பெண், பிரபல தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் பாலியல் புகார் அளித்த வர்ஜீனியா கியூப்ரே தற்கொலை செய்துகொண்டார்.


இந்நிலையில், குற்றச்சாட்டுக்கு ஆளான இளவரசர் ஆண்ட்ரூ, அரச பட்டங்களை துறப்பதாக அறிவித்தார். தன் மீதான குற்றச்சாட்டுகள், மன்னர் மற்றும் அரச குடும்பத்தின் பணிகளுக்கு இடையூ ஏற்படுத்துவதாகக் கூறி, பொரு வாழ்க்கையில் இருந்து விலகுவதாகவும் அவர் முடிவெடுத்தார்.


தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை ஆண்ட்ரூ மறுத்து வந்த நிலையில், சமீபத்தில் வெளியான கியூப்ரேவின் நினைவுக் குறிப்பின் மூலம், அது உடைபட்டது. அதில், தன்னுடன் உடலுறவு கொள்வது தனது பிறப்புரிமை என்று ஆண்ட்ரூ நம்பியதாக கியூப்ரே குறிப்பிட்டிருந்ததால், ஆண்ட்ரூவிற்கு மேலும் சிக்கல் ஏற்பட்டது.


இந்த மாத தொடக்கத்தில், 2011-ம் ஆண்டு ஆண்ட்ரூ மற்றும் எப்ஸ்டீன் இடையே நடந்த உரையாடல்கள் சில பத்திரிகைகளில் வெளியாகின. அதில், தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருக்குமாறும், இன்னும் சில விளையாட்டுக்களை விளையாடலாம் என்றும் ஆண்ட்ரூ எப்ஸ்டீனிடம் கூறியது வெளியானது.


பறிபோன அரச பட்டங்கள், வீடு


இதைத் தொடர்ந்து, ஆண்ட்ரூ, டியூக் ஆஃப் யார்க் பட்டத்தைப் பயன்படுத்துவதை கைவிட்டார். மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்துக்குப் பிறந்ததிலிருந்து ஆண்ட்ரூ கொண்டிருந்த "இளவரசர்" என்ற பட்டத்தை இப்போது மன்னர் சார்லஸ் நீக்கியுள்ளார்.


மேலும், தனது தம்பியான இளவரசர் ஆண்ட்ரூவின் அரச பட்டங்களை பறிப்பதற்கான முறையான நடவடிக்கைகளை மன்னர் சார்லஸ் தொடங்கியுள்ளார். அதோடு, ஆண்ட்ரூ வின்ட்சர் இல்லத்தை காலி செய்யவும் பக்கிங்ஹாம் அரண்மனை உத்தரவிட்டுள்ளது.


இது குறித்து அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், இளவரசர் ஆண்ட்ரூவின் உடை, படங்கள் மற்றும் கவுரவங்களை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், இளவரசர் ஆண்ட்ரூ இனி ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் என்று அழைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, அவரது வின்ட்சர் இல்லத்தை காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ரூ இனி மாற்று தனியார் தங்குமிடத்திற்கு செல்வார் என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.