- பீகார் பரப்புரையில், தமிழ்நாட்டில் வேலை செய்யும் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுவதாக பிரதமர் மோடி பேசியதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம். இதுபோன்ற பேச்சுக்களால் தன்னுடைய மாண்பை மோடி இழந்துவிடக் கூடாது எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
- ஒடிசா, பீகார் என எங்கு சென்றாலும், பாஜகவினர் தமிழர்களின் மீதான வன்மத்தை தேர்தல் அரசியலுக்கான வெளிப்படுத்துவதற்கு தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கண்டனத்தை தெரிவிப்பதாக மு.க. ஸ்டாலின் பதிவு.
- சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல். வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் புரளி என கண்டுபிடிப்பு.
- கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, வேலுசாமிபுரத்தைச் சேர்ந்த மக்கள், கடைக்காரர்களுக்கு சம்மன். சம்மன் பெற்றவர்கள் சிபிஐ முன் விசாரணைக்கு ஆஜர்.
- தமிழ்நாட்டில் வெப்பச் சலனம் காரணமா மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
- சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு. இரு வகுப்புகளுக்கும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி தேர்வுகள் தொடங்கும் என அறிவிப்பு.
- சர்தார் வல்லபாய் பட்டேலின் 150வது பிறந்தநாளை ஒட்டி, குஜராத்தில் சர்தார் பட்டேலின் சிலைக்கு மலர்கள் தூவி பிரதமர் மோடி மரியாதை. 597 அடி உயர சிலை மீது ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்பட்டன.
- ‘பீகாரி‘ என்ற வார்த்தை கூட ஒரு அவமதிப்பாக மாறிவிட்டது. பிற மாநிலங்களில் பீகாரிகள் துன்புறுத்தப்படும்போது காங்கிரஸ் தலைவர்கள் கை தட்டுகின்றனர் என்று மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி(ராம் விலாஸ்) தலைவருமான சிராக் பாஸ்வான் குற்றச்சாட்டு.
- மூன்றாம் வகுப்பு முதல் பள்ளி மாணவர்களுக்கு ஏஐ பற்றி கற்றுத்தர மத்திய அரசு திட்டம். செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டங்களை உருவாக்குமாறு அனைத்து கல்வி வாரியங்களுக்கும் கல்வித்துறை உத்தரவு.
- தென் கொரியாவில் சீன அதிபருடன் அமெரிக்க அதிபர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின், சீனாவிற்கான வரியை 10% குறைத்தார் ட்ரம்ப். ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்ததற்கு பாராட்டு.
- அமெரிக்காவின் பொருளாதார தடையை தொடர்ந்து, ரஷ்யாவின் 2-வது பெரிய எண்ணெய் நிறுவனமான லூக்ஆயில், தனது சர்வதேச வணிக சொத்துக்களை விற்க முடிவு. அந்த சொத்துக்களை Gunvor என்ற வர்த்தக நிறுவனம் வாங்குவதாக அறிவிப்பு.
- மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்திய மகளிர் அணி. அதிக டோட்டலை சேஸ் செய்து வென்ற முதல் அணி என்ற சாதனையையும் படைத்தது.
- இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி மெல்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி மழையால் ரத்தானது.