கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை என அக்டோபர் 20ம் தேதி பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து லிஸ் டிரஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அடுத்த பிரதமர் பதவிக்கு முன்னாள் பிரதமர் உள்ளிட்ட பலரும் முயற்சி செய்த நிலையில் ஆதரவு கிடைக்கவில்லை. 






பிரதமராக பதவியேற்பு:


இதையடுத்து , ரிஷி சுனக் போட்டியிடுவதாக அறிவித்த நிலையில், அவருக்கு 100-க்கு மேற்பட்டோரின் ஆதரவு, அதாவது பெருண்பாண்மைக்கு அதிகமாக ஆதரவு கிடைத்தது. இதையடுத்து, ரிஷியை ஆட்சி அமைக்க, மன்னர் சார்லஸ் அழைப்பு விடுத்தார். இதையடுத்து மன்னர் சார்லஸை- 3ஐ சந்தித்தபின், பிரதமராக பதவியேற்றார்.  






இந்நிலையில் பதவியேற்றபிவுடன் புதிய அமைச்சரவை அமைப்பது தொடர்பாக இறங்கியதாக கூறப்படுகிறது. மேலும் முன்னாள் பிரதம் லிஸ் டிரஸ் அமைச்சரவையில் இருந்த பலரையும் ராஜினாமா செய்யுமாறு, ரிஷி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.


பதவியேற்றதும் அதிரடி


இதுவரை மூன்று அமைச்சர்கள் பதவி விலக கேட்டு கொள்ளப்பட்டதாகவும், அவர்களில் வணிக செயலாளர் ஜேக்கப் ரீஸ்-மோக், நீதித்துறை செயலாளர் பிராண்டன் லூயிஸ் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் விக்கி ஃபோர்ட் ஆகியோரும் அடங்குவர் என கூறப்படுகிறது. ஆனால் நிதி துறை அமைச்சர் ஜெர்மி ஹண்ட் தொடர்ந்து பதவியில் நீடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இன்று பதவியேற்ற ரிஷி, உரையில் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதரத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்வேன் என உறுதியளித்தார்.






மேலும் தேசிய சுகாதார அமைப்பு திட்டம் , கல்வி, பாதுகாப்பான தெருக்கள், ஆயுதப்படைகளை ஆதரித்தல், மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றும் என்றும் சுனக் கூறினார்.