ஜீன் எடிட்டிங், குளோனிங் போன்ற தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மனிதர்களுக்கு மாற்றும் சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.   


நியூ யார்க் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் NYU Langone Health என்ற சுகாதார ஆய்வு மையம் பன்றியின் சிறுநீரகத்தை மனிதர்களுக்கும் பொருத்தும் முயற்சிகளை  மேற்கொண்டு வந்தன. 


நோயாளியின் உடலைப் பொறுத்துவரை இடமாற்றம் செய்யப்பட்ட சிறுநீரகமும் ஒருவகையான அன்னியப் பொருள் என்பதால், அதனை அவரது உடல் நிராகரிக்க(உதறித் தள்ள) முயற்சிக்கும்.  எனவே, நிராகரிப்பு செய்யாதவாறு பன்றியின் சிறுநீரகத்தை மரபணு மூலம் ஆய்வாளர்கள் மாற்றியமைத்துள்ளனர்.    


ஆய்வின் தலைவர் Robert Montgomery இதுகுறித்து கூறுகையில், " பன்றியின் நோய் எதிர்ப்பு அமைப்பு மனிதர்களுடன் ஒத்துப்போக வைப்பதே ஆய்வின் முக்கிய நோக்கமாகும். இனப்பெருக்க உதவி தொழில்நுட்ப  மூலம் வாடகைத்தாய் க்குள் (பெண் பன்றி) மரபணு மாற்றம் செய்யப்பட்ட முளையம் (embryo)  செலுத்தப்பட்டது.  வாடகைத்தாய் பெற்றெடுத்த  குட்டிப்பன்றியின் நோய் எதிர்ப்பு அமைப்பு மனிதர்களுடன் ஒத்துப்போனது. சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்ட மூளை இறப்பு நோயாளியின் இரத்த நாளங்களுடன் இணைக்கப்பட்டன.  


 






 


நோயாளியின் யூரியா, குளோரைடு போன்ற கழிவுப் பொருள்களைப் பிரித்தெடுத்து வெளியேற்றும் முக்கியமான பணியைச் சிறப்பாக இந்த சிறுநீரகம் செய்தது. கிட்டத்தட்ட 56 மணி நேர ஆய்வுக்குப் பின், மனிதர்களிடம் இருந்து பெறப்படும் சிறுநீரகத்தைப் போலவே, இதுவும்  இரத்தத்தில் காணப்படும் அதிகப்படியான திரவம் மற்றும் கழிவுகளை நீக்குகின்றன என்பதனை உறுதி செய்தோம்" என்று தெரிவித்தார்.  




பொதுவாக, சிறுநீரகங்கள் வேகமாக செயல்படாத நபருக்கு  உயிரோடுள்ள அல்லது இறந்த தானமளிக்கும் நபரின் சிறுநீரகத்தை வைப்பதன் மூலம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இருப்பினும், நாடு முழுவதும் உறுப்பு தானங்களின் தேவை அதிகரித்து காணப்படுகிறது. இந்தியாவில் மட்டும் 220,000 நோயாளிகள் சிறுநீரக தானத்தை எதிர்நோக்கி உள்ளன.     


தற்போதைய ஆய்வு வெற்றி பெற்றுள்ளதையடுத்து, எதிர்காலத்தில் மனிதர்களுக்கு தேவைப்படும் இதயம், கல்லீரல், நுரையீரல் போன்ற பிற உறுப்புகளை பன்றியிடம் இருந்து பெறுவதற்கான  வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.     


மேலும், பன்றி விரைவாக வளரும் தன்மை கொண்டதுடன் ஒரு ஈற்றில் 10-12 குட்டிகள் வரை ஈனும் திறன் பெற்றது. ஒரு வருடத்திற்கு நல்லப் பராமரிப்பு இருந்தால் 2 ஈற்றுகள் குட்டி ஈனும்.  எளிய கட்டிடம் மற்றும் கொட்டகை அமைப்பில் சரியான தீவனமும் முறையான நோய்பராமரிப்புச் செய்தால் பன்றி வளர்ப்பு மிகச்சிறந்த இலாபம் தரக்கூடிய தொழிலாகும். 


இருப்பினும், தொழில்நுட்ப முறையை விட விலங்குகளின் உரிமை மற்றும் அறநெறி சார்ந்த விவாதங்களும் இதில் அடங்கியுள்ளன.