பாகிஸ்தான் நாட்டில் கடும் நெருக்கடி நிலவரம் ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் பொருளாதார நிலையும், அரசியல் நிலையும் அந்த நாட்டு மக்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான்கான் தலைமையில் அவசர அமைச்சரவை ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பிறகு பாகிஸ்தான் நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்துவதாக முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அந்த நாட்டில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்பட நாட்டின் உயர் அதிகாரிகளும், அனைத்து அரசு அலுவலர்களும் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அவசரநிலை பிரகடனத்தால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்