உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் போர் எப்போது முடியும், எப்படி முடியும் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. ரஷ்யா தற்போது கிழக்குப் பகுதிக்கு தனது தாக்குதல் இலக்கை மாற்றியுள்ள நிலையில், உருக்குலைந்த நகரங்களில் உள்ள மக்களின் உள்ளக் குமுறல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.உக்ரைன் நகரின் பல்வேறு பகுதிகள் ரஷ்யாவின் தாக்குதலில் மோசமாக பாதிக்கப்பட்டன. கீவ் பகுதியில் உள்ள அரசு கட்டிடங்கள், கல்வி நிறுவங்கள் உள்பட பல லட்சக்கணக்கான மக்கள் போரில் மாண்டனர்.


ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் நாட்டில் தாக்குதலை நடத்திவரும் நிலையில், கிழக்கு உக்ரைன் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 50 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதில், பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள். இந்த சம்பவம் உக்ரைன் மக்களை மிகுந்த கோபத்தில் ஆழ்த்தி இருக்கிறது. குழந்தைகளை குறிவைத்து நடத்தப்பட்டிருக்கும் தாக்குதலால் மக்கள் அச்சத்தில் உள்ளதாக தகவல் வெளியானது.இப்படி ஒருபுறம் தாக்குதல் நடைபெறும் வேளையில் மறுபுறம் பாலியல் வன்கொடுமைகளும் அரங்கேறுவதாக தொடர் புகார்கள் வெளியாகி வருகின்றன. அப்படி ஒரு கொடூர சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டு இப்போது எழுந்துள்ளது.




11 வயது சிறுவன்..


ரஷ்யப் படையால் 11 வயது சிறுவன் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், அந்த சிறுவனின் தாயாரை அருகே நாற்காலியில் கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமையை நேரில் பார்க்க வைத்த கொடுமை அரங்கேறியதாகவும் உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. இந்த பாலியல் வன்கொடுமை புகார்கள் தொடர்ந்து அடுக்கப்பட்டே வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு, போரில் ஈடுபட்டுள்ள ரஷ்ய வீரர்கள் 10 வயதுக்கும் உட்பட்ட உக்ரைன் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்துள்ளதாக எம்பி லெசியா குறிப்பிட்டிருந்தார். அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''போரில் ஈடுபட்டுள்ள ரஷ்ய வீரர்கள் கொள்ளைமட்டுமே அடிப்பதில்லை. 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவர்களின் பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்டுள்ளது. அவர்களின் உடலில் ஸ்வஸ்திக் முத்திரை நெருப்பால் பதிவியப்பட்டுள்ளது. ரஷ்ய தாய்களால் வளர்க்கப்பட்ட ரஷ்ய ஆண்கள் இந்த கொடூரத்தை செய்துள்ளனர் என பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.


Sun Online reports வெளியிட்ட தகவலின்படி உக்ரைனில் இருந்து 1 லட்சத்து 20ஆயிரத்துக்கும் அதிகமான சிறார்கள் கடத்தப்பட்டதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண