ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கைப்பற்றினர். அவர்கள் கைப்பற்றியது முதல் அந்த நாட்டில் பதற்றமான சூழலே நிலவி வருகிறது. இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்புதான் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூல் விமான நிலையத்திற்கு அருகில் இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்றது. இந்த நிலையில், இன்று மாலை காபூலில் உள்ள விமான நிலையத்தின் அருகில் மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஏற்பட்ட பாதிப்பு, உயிரிழப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் தெரியவில்லை.
Kabul Blast Update: காபூலில் மீண்டும் குண்டுவெடிப்பு.. பதற்றமான சூழல்!
சுகுமாறன் | 29 Aug 2021 06:41 PM (IST)
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால், அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
காபூல் விமான நிலையம்