நெட்ஃபிளிக்ஸ்(netflix )-ஐ உடனே ரத்து செய்யுங்கள் என்று பெற்றோர்களுக்கு எலான் மஸ்க் வேண்டுகோள் வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து பலரும் நெட்பிளிக்ஸ் subscription ஐ ரத்து செய்து வருவதோடு நெட்பிளிக்ஸை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
நெட்ஃபிளிக்ஸ்:
பிரபல ஓடிடி தளங்களில் அதிக சந்தாதாரர்களை கொண்ட ஓடிடி தளம் நெட்ஃபிளிக்ஸ். இது த்ரில்லர், ரொமான்ஸ்,ஹாரர் மற்றும் குழந்தைகள் பார்க்கும் ஹார்ட்டூன் திரைப்படங்களும் வெளியிடப்பட்டு வருகிறது. பல்வேறு வெப் சீரிஸ்களும் இதில் ஸ்டிரீம் செய்யப்பட்டும் வருகிறது. இந்த நெட்ஃபிளிக்ஸ் பல்வேறு நாடுகளிலும் இயங்கி வருகிறது.
தயவு செய்து ரத்து செய்யுங்கள்:
இந்த நிலையில் தான் நெட்ஃபிளிக்ஸ்க்சை தடை செய்ய வேண்டி பெற்றோர்களுக்கு ஒரு கோரிக்கையை வைத்துள்ளார் பிரபல பணக்காரரும், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக நெட்ஃபிளிக்ஸை ரத்து செ ய்யுங்கள்”என்று கூறியுள்ளார். எலான் மஸ்க்கின் இந்த கோரிக்கையை ஏற்று பலரும் நெட்ஃபிளிக்ஸ் subscription ஐ- ரத்து செய்து வருகின்றனர்.
நெட்ஃபிளிக்ஸ் மீது என்ன குற்றச்சாட்டு:
நெட்ஃபிளிக்ஸ் தொடர்ந்து LGBTQ+ கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டு வருகிறது. அதேபோல், நெட்ஃபிளிக்ஸ் மறைமுகாக குழந்தைகளிடம் LGBTQ முறையை திணித்து வருகிறது என்ற குற்றச்சாட்டுகளையும் சிலர் வைத்து வருகின்றனர். இதனால் தான் உங்கள் குழந்தைகளை இந்த அஜண்டாவிடம் இருந்து காப்பற்ற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உடனே நெட் பிளிக்ஸை ரத்து செய்யுங்கள் என்று மஸ்க்கின் ஆதரவாளர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
எலான் மஸ்க்கின் கருத்துக்கு எதிர்ப்பு:
எலான் மஸ்க்கின் பேச்சை கேட்டு பலர் நெட்ஃபிளிக்ஸ் subscription ஐ ரத்து செய்தாலும் அவருக்கு எதிரான கருத்துக்களும் அமெரிகாவில் வலுத்து வருகிறது. அதே நேரம் நெட்ஃபிளிக்ஸ் இது தொடர்பாக இதுவரை கருத்து எதுவும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.