Watch Video: திடீரென வந்த போன் கால்..! அந்தரத்தில் பாதுகாப்பிற்கு சென்ற போர் விமானங்கள், இன்னும் என்னெல்லாம் நடக்குமோ..!
Watch Video: பயணிகள் விமானத்திற்கு திடீரென இரண்டு போர் விமானங்கள் பாதுகாப்பிற்கு சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Watch Video: பயணிகள் விமானத்திற்கு திடீரென வந்த வெடிகுண்டு மிரட்டலால், இரண்டு போர் விமானங்கள் பாதுகாப்பிற்காக சென்றன.
இந்தியாவிற்கு புறப்பட்ட விமானம்:
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் AA292, சனிக்கிழமை (பிப்ரவரி 22) நியூயார்க்கின் ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இரவு 8.11 மணியளவில் டெல்லியை நோக்கி புறப்பட்டது. டெல்லியில் தரையிறங்குவதற்கு சுமார் மூன்று மணி நேரத்திற்கு முன்பு, விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கிடைத்துள்ளது. இதையடுத்து, காஸ்பியன் கடலுக்கு மேலே பறக்கும் போது, விமானம் உடனடியாக ரோம் நோக்கி திருப்பி விடப்பட்டது. இந்நிக்லையில் இத்தாலிய விமானப்படை வெளியிட்ட காட்சிகள், வணிக விமானத்தின் இருபுறமும் போர் விமானங்கள் இருப்பதைக் காட்டுகின்றன. அவை ரோமின் ஃபியமிசினோ விமான நிலையம் வரை பாதுகாப்பு அளித்தன.
வைரல் வீடியோ:
இத்தாலிய வான்பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள வீடியோவில், “அமெரிக்காவின் பயணிகள் விமானம் வானில் பறக்க, அதற்கு இரண்டு புறமும் போர் விமானங்கள் கண்காணித்தபடி பயணித்துள்ளன. பொதுவாக சாலை மார்க்கமாக தலைவர்கள் பயணிக்கும்போது, அவர்களது வாகனத்திற்கு முன்னும், பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும். அதே பாணியில் இந்த விமானத்திற்கு, போர் விமானங்கள் பாதுகாப்பு அளித்தன. இதுதொடர்பான வீடியோக்களை பகிர்ந்துள்ள நெட்டிசன்கள், “வாழ்க்கைலா இன்னும் என்னவெல்லாம் பாக்க காத்திருக்கோமோ தெரியல?” என பதிவிட்டு வருகின்றனர்.
வெடிகுண்டு மிரட்டல்:
இத்தாலிய விமானப்படை வெளியிட்டுள்ள சமூக ஊடகப்பதிவில், இரண்டு யூரோஃபைட்டர்கள் டெல்லி நோக்கிச் செல்லும் ஒரு வணிக விமானத்தை அடையாளம் கண்டு அழைத்துச் செல்ல விழிப்புடன் புறப்பட்டன. அந்த விமானத்தில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கூறப்பட்டதால், அந்த விமானம் ஃபியூமிசினோ விமான நிலையத்தை (RM) நோக்கித் திரும்பியது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் 199 பயணிகள் மற்றும் பணியாளர்கள் பயணித்தது குறிப்பிடத்தக்கது.
பயணிகள் நிம்மதி:
பரபரப்பான சூழலுக்கு மத்தியில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இதுதொடர்பாக அதில் பயணித்த யாஷ் ராஜ் என்பவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “நாங்கள் பயணித்த விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. நிலைமையை இவ்வளவு சிறப்பாகக் கையாண்டதற்காக கேபின் குழுவினருக்கு மிகப்பெரிய பாராட்டுகள்" என்று பதிவிட்டுள்ளார்.