''வேறு வழியில்லை.. இங்கேயே இறக்குங்க..'' : நடுக்கடலில் விமானத்தை தரையிறக்கிய விமானிகள்!

ஹொனலுலுவில் இருந்து மாலி தீவை நோக்கி சென்ற விமானத்தில் என்ஜின் செயலிழந்த காரணத்தால் நடுக்கடலில் விமானத்தை இறக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.

Continues below advertisement

அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தின் தலைநகர் ஹொனலுலு அருகே பறந்து கொண்டிருந்த போயிங் 747 ரக சரக்க விமானம், நடுவானில் செயலிழந்தது. சரக்கு விமானம் என்பதால், பயணிகள் யாருமின்றி இரண்டு விமானிகள் மட்டுமே விமானத்தை இயக்கிச் சென்றனர்.

Continues below advertisement

ஹொனலுலுவில் இருந்து மாலி தீவை நோக்கி சென்ற விமானத்தில் என்ஜின் செயலிழந்த காரணத்தால் நடுக்கடலில் விமானத்தை இறக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. விமானத்தை இயக்கி வந்த விமானிகள், அவசர நிலையை உணர்ந்து, நடுக்கடலில் விமானத்தை இறக்க முடிவு செய்தனர். வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1.33 மணிக்கு விமானம் நடுக்கடலில் இறக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்த அமெரிக்க கடலோர படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மீட்பு விமானம், 45-அடி படகு ஆகியவற்றை கொண்டு நடுக்கடலில் சிக்கியிருந்த விமானிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஓஹோ தீவிற்கு அருகில் கண்டறியப்பட்ட விமானிகளை, அதிகாலை 2.30 மணியளவில் அமெரிக்க கடலோர படையினர் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட விமானிகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இப்போது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க கடலோர படையைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடக்க இருப்பதை முன்கூட்டிய யூகித்த விமானிகள், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். முதல் என்ஜின் பழுதானதை தொடர்ந்து, அடுத்த என்ஜின் பழுதாக இருப்பதை விமானிகள் உணர்ந்திருந்தனர். இதனால், உடனே தரை கட்டுப்பாட்டு அறையில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு ஆகிய இரு அமைப்புகளும் இந்த விமான விபத்து குறித்து விரிவாக விசாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையின் முடிவில், தரை இறங்கிய போயிங் 737 ரக விமானம், க்ளாசிக் மாடல் என்பதும் 33 ஆண்டுகள் பழமையானது என்பதும் தெரியவந்துள்ளது. 

ஏற்கனவே, 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் விபதுக்குள்ளான போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை இயக்க சர்வதேச அளவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால், தடை செய்யப்பட்ட விமான ரக வகைதான் இந்த விமானமா என விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், இது போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து, அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola