Baltimore Bridge Collapse: அமெரிக்காவில் பால்டிமோர் பகுதியில் நடந்த பால விபத்தில், நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 


தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தம்:


பால்டிமோர் நகரில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் மீது பெரிய சரக்கு கப்பல் மோதியதில், செவ்வாய்க்கிழமையன்று அந்த பாலம் இடிந்து விழுந்தது. இதில் நீரில் மூழ்கிய 8 பேரில் 2 பேர் மீட்கப்படுள்ளனர். மற்ற ஆறு தொழிலாளர்களும் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.  மேலும் அவர்களை தேடும் பணி உள்ளூர் நேரப்படி,  புதன்கிழமை காலை வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. 


6 பேரும் பலியா?



  • தண்ணீரின் குளிர்ச்சியான சூழல் மற்றும் பாலம் இடிந்து விழுந்தது தொடர்பான கடந்த கால நிகழ்வுகளின் அனுபவங்கள் அடிப்படையில்,  காணாமல் போன 6 பேரும் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று அமெரிக்க கடலோர காவல்படை மற்றும் மேரிலாந்து மாநில காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • விபத்து நிகழ்ந்த சுமார் 18 மணி நேரத்திற்குப் பிறகு தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை மீண்டும் மீட்பு பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • விபத்து ஏற்பட்டபோது, ​​பாலத்தின் சாலை மேற்பரப்பில் உள்ள பள்ளங்களை நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்த எட்டு பேர் நீரில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.

  •  கப்பல் கட்டுப்பாட்டை இழந்ததை தொடர்ந்து பாலத்தின் மீது மோதுவதற்கு முன்பேமின்சாரம் துண்டிக்கப்பட்டதோடு, போக்குவரத்தும் பெரும்பாலும் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது.

  • அதிபர் ஜோ பிடன் விரைவில் பால்டிமோர் நகருக்கு நேரில் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலத்தை மறுகட்டமைப்பு செய்வதற்கான அனைத்து செலவையும் அரசே ஏற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் 1977 இல் திறக்கப்பட்டது மற்றும் உலகின் மிக நீளமான டிரஸ் பாலங்களில் ஒன்றாகும். இது அமெரிக்க தேசிய கீதத்தின் ஆசிரியரான "The Star-Spangled Banner" பெயரை கொண்டுள்ளது

  • பால்டிமோர் துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்தை நிறுத்துவதன் மூலமும், சரக்கு மற்றும் பயணிகள் வழித்தடங்களை அடைப்பதன் மூலமும், பல மாதங்கள் சரக்கு பரிமாற்றங்கள் பாதிப்படையும் என கூறப்படுகிறது.






பால்டிமோர் பால விபத்து:


சிங்கப்பூர் கொடியுடன் இலங்கைக்கு சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல்,  படாப்ஸ்கோ ஆற்றின் முகப்பில் உள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் மீது மோதியது. 1.6-மைல் (2.57-கிலோமீட்டர்) பாலத்தின் ஒரு பகுதி உடனடியாக நீரில் சரிந்து. இதனால், பாலத்தின் மீது இருந்த வாகனங்களும்,  மக்களும் நிலைதடுமாறி ஆற்றில் விழுந்தனர். கப்பலில் ஏற்பட்ட மின்சார தடை காரணமாகவே கட்டுப்பாட்டை இழந்த படகு, விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. நீர்வழி போக்குவரத்து உள்கட்டமைப்புக்கான உலக சங்கத்தின் 2018 அறிக்கையின்படி, 1960 மற்றும் 2015 க்கு இடையில் உலகளவில் 35 பெரிய பாலம் இடிந்து விழுந்ததில் கப்பல் அல்லது படகுகள் மோதியதன் விளைவாக மொத்தம் 342 பேர் உயிரிழந்துள்ளனர்.