சமூக வலைதளங்கள் மனிதர்கள் ஆடல், பாடல் தொடங்கி சாகசங்கள் வரை உருண்டு புரண்டு தாங்கள் கற்ற மொத்த வித்தையையும் இறக்கி ட்ரெண்டிங்கில் இடம்பிடிக்கிறார்கள்.
ஆனால் இது போன்ற எந்தவித ஆர்ப்பாட்டங்களும் மெனக்கெடல்களும் இன்றி தங்கள் இயல்பால், சின்ன சின்ன க்யூட்டான சைகைகளால் குழந்தைகளும் வளர்ப்புப்பிராணிகளும் நெட்டிசன்களின் இதயங்களை அள்ளிவிடுகின்றனர்.
குழந்தைகளுக்கும் வளர்ப்புப் பிராணிகளுக்கும் ஏகப்பட்ட ஒற்றுமைகள் இயல்பிலேயே உள்ளன. குழந்தைகளும் வளர்ப்புப் பிராணிகளும் இணையுமிடம் சுட்டித்தனத்தின் உச்சக்கட்டத்தை அடையும். அந்த வகையில் பூனை ஒன்றுக்கு அதன் காலைப் பிடித்து வண்ணம் தீட்ட சொல்லிக் கொடுக்கும் குழந்தையின் வீடியோ சமூக வலைதளத்தில் லைக்ஸை அள்ளி வருகிறது.
பூனைகளின் இயல்பாகவே குபீர் சிரிப்பை வரவழைக்கும் சுட்டியான ரியாக்ஷன்களை வழங்கி நம்மை மகிழ்ச்சிப்படுத்தக்கூடியவை. இந்த வீடியோவில் தன் காலைப் பிடித்து தனக்கு உன்னிப்பாக வண்ணம் தீட்ட சொல்லிக் கொடுக்கும் சுட்டிக் குழந்தையின் அன்புத் தொல்லையை சகித்துக் கொண்டு ஓரக்கண்ணால் பார்த்து பூனை அளிக்கும் ரியாக்ஷன் நெட்டிசன்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டு வருகிறது.
இதேபோல், முன்னதாக தனக்கு ஆடை, விக் அணிவித்து அழகு பார்க்கும் உரிமையாளரிடம் பூனை ஒன்று ’நோ’ சொல்லும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலானது.
மொத்தம் மூன்று பூனைகளை வளர்க்கும் இப்பெண் dont stop neowing எனும் இப்பக்கத்தில் தன் செல்ல பூனைகளின் அனைத்து குறும்பான நடவடிக்கைகளையும் வீடியோக்களாக பதிவிட்டு வருகிறார்.
உலகம் முழுவதும் உள்ள கேட் பேரண்ட்ஸ், கேட் லவ்வர்ஸை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த இன்ஸ்டாகிராம் பக்கம்.
குறிப்பாக 'சேஸ்’ எனும் பூனை ‘நோ’, ‘மாம்’ எனக் குறிப்பிட்ட வார்த்தைகளை சொல்வது போல் கத்துவது பலரையும் ஈர்த்து லைக்ஸ்களை குவித்து வருகிறது.