ஆலிஸ் செபோல்ட் என்னும் அமெரிக்க எழுத்தாளர், தி லவ்லி போன்ஸ் மற்றும் தி அல்மோஸ்ட் மூன், லக்கி ஆகிய நாவல்கள் மூலம் பிரபலம் அடைந்தவர், அவர் எழுதிய 'லவ்லி போன்ஸ்', நாவல் அதிக விற்பனை ஆன நாவல் என்று புகழப்படுவது மட்டுமின்றி, அதே பெயரில் அந்த நாவலை தழுவி ஒரு திரைப்படமும் உருவானது. 2010ல் லக்கி நாவல், ஒரு மில்லியன் பிரதிகள் விற்றது. இவர் சைராகஸ் யுனிவர்சிட்டியில் படிக்கும்போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். ஆலிஸ் செபோல்டு ஆண்டனி பிராட்வாட்டர் என்பவரை தவறாக குற்றவாளி என்று அடையாளம் காட்டியதால், அதன் காரணமாக 16 ஆண்டுகள் சிறையில் இருந்தார். தற்போது அவர் குற்றவாளி இல்லை என்று நிரூபிக்கப்பட்டு வெளியில் வந்துள்ளார். சம்பவத்தன்று மே 8, 1981 அதிகாலையில், செபோல்ட் சைராகுஸ் பல்கலைக்கழகத்தில் புதிய மாணவராக இருந்தபோது, வளாகத்திற்கு அருகிலுள்ள ஒரு ஆம்பிதியேட்டருக்கு அருகில் ஒரு சுரங்கப்பாதை வழியாக வீட்டிற்கு நடந்து செல்லும் போது அவர் தாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவர் நடந்த சம்பவத்தை கேம்பஸ் செக்யூரிட்டி மற்றும் போலிசாரிடம் புகாரளித்தார், அவர்கள் அவரது வாக்குமூலத்தை விசாரித்தனர், ஆனால் சந்தேகப் படக்கூடிய நபர்களை அடையாளம் காண முடியவில்லை.



ஐந்து மாதங்களுக்குப் பிறகு, சைராகுஸ் வளாகத்திற்கு அருகே ஒரு தெருவில் நடந்து செல்லும் போது, ​​கற்பழிப்பாளர் என்று அவர் நம்பும் ஒருவரை பார்த்துள்ளார். ஆண்டனி பிராட்வாட்டர் என்ற அந்த மனிதர் அதனால் 16 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார், அவர் குற்றமற்றவர் என்பதைத் தொடர்ந்து கூறிவந்த நிலையிலும் கடைசிவரை நிரூபிக்கப்படவில்லை. அவர் கடைசிவரை தாக்குதலை ஒப்புக்கொள்ளாததால், அவருக்கு ஐந்து முறை பரோல் மறுக்கப்பட்டது.


இந்த சம்பவத்துக்கு பிறகு பெரிதும் பாதிக்கப்பட்ட ஆலிஸ், பாலியல் வன்கொடுமை பற்றி ஒரு நாவல் எழுத முனைந்து, அதனை முடிக்க மிகவும் சிரமப்பட்டார். மனா ரீதியாக பல உளைச்சல்களை மீறி 1999 ஆம் ஆண்டு லக்கி நாவலை வெளியிட்டார். அதில் பிராட்வாட்டருக்கு பதிலாக கிரிகோரி மேடிசன் எனும் பெயரை பயன்படுத்தினார். நியூயார்க் உச்ச நீதிமன்ற நீதிபதி கடந்த வாரம் திரு பிராட்வாட்டரின் தண்டனையில், ஒரு ஆசிரியரின் சாட்சியம் மற்றும் நுண்ணிய முடி பகுப்பாய்வு முறையை பெரிதும் நம்பியிருப்பதைக் கண்டறிந்தார், அது தற்போது மதிப்பிழந்துவிட்டது. திரு பிராட்வாட்டர் 1998 இல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார், ஆனால் நியூயார்க்கின் பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் இருந்தார்.



1982ல் சிறை சென்ற பிராட்வாட்டர் 1999 ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதில் இருந்து பல வருடங்களில் குப்பைகளை எடுத்துச் செல்லுபவராகவும், கைவினைஞராகவும் பணிபுரியுந்துள்ளார். பாலியல் குற்றம் தனது வேலை வாய்ப்புகளையும் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடனான தனது உறவுகளையும் சிதைத்துவிட்டதாக கூறினார். அவரிடம் மன்னிப்பு கேட்டு பேசிய ஆலிஸ் கூறியதாவது, "அந்தோனி பிராட்வாட்டரிடம் நான் உண்மையிலேயே என் அடி மனதிலிருந்து மன்னிப்பு கோருகிறேன், நீங்கள் கடந்து வந்த தண்டனைகளுக்காக நான் மிகவும் வருந்துகிறேன். நீங்கள் வாழ்ந்திருக்கக்கூடிய வாழ்க்கை உங்களிடமிருந்து அநியாயமாக பறிக்கப்பட்டதற்காக நான் மிகவும் வருந்துகிறேன், மேலும் எந்த மன்னிப்பாலும் உங்களுக்கு நடந்ததை மாற்ற முடியாது, ஒருபோதும் மாறாது என்பதை நான் அறிவேன். 1982ல் எனது இலக்கு நீதி, அநீதியை நிலைநிறுத்துவது அல்ல. நான் செய்த தவறின் மூலம் ஏற்பட்ட இழப்பை ஒரு இளைஞனின் வாழ்க்கையை நிச்சயமாக நிரந்தரமாக மாற்ற முடியாது."  என்று 58 வயதான செபோல்ட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.