ஆஸ்திரேலியாவில் கூட்டாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதற்கான வாக்கெடுப்பு இன்று நடந்து வருகிறது. நாடு முழுவதும் அதற்காக பல்வேறு இடங்களில் வாக்குப் பதிவு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, வாக்குப்பதிவும் முழு வீச்சில்ந நடந்து வருகிறது. ஆஸ்திரேலியர்கள் தேசிய கடமையாற்றுவதில் கொஞ்சம் மும்முரவானவர்கள். ஆனால், இங்கு ஒருவர் தனது கடமையை ‛கொஞ்சம் ஓவராகவே’ ஆற்றிவிட்டார். 


தனது குடும்பத்தோடு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரைக்கு வந்த உள்ளூர்வாசியான ஜிம் ஃபின் என்பவர், வாக்குப்பதிவு நடைபெறுவதை அறியாமல் தனது மனைவி மற்றும் 8 மாத குழந்தையுடன் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தான், வாக்குப்பதிவு நடைபெறுவதை அங்குள்ளவர்கள் மூலம் அறிந்து கொண்டார் ஜிம் ஃபின். அந்த நேரம் பார்த்து, அவரது மனைவி வெளியில் எங்கோ சென்ற நிலையில் , தனது கண்காணிப்பில் இருந்த 8 மாத மகள் அலெக்ரா ஃபின்னுடன், அருகில் உள்ள போண்டி பீச் வாக்குச் சாவடிக்கு பீச் குளியல் உடையுடன் புறப்பட்டார். 




அங்கு பரபரப்பாக ஓட்டுப்பதிவு நடந்து கொண்டிருக்க, பீச் உடையுடன், தன் குழந்தையுடன் பங்கேற்ற ஃபின், தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். அனைவரும் கோட், சூட் அணிந்து கம்பீரமாக வந்து வாக்களித்துக் கொண்டிருக்க, வெறுமனே ஜட்டியை மட்டும் அணிந்து கொண்டு, ஃபின் வாக்களிக்க வந்ததை, அங்கிருந்த போட்டோகிராபர்கள் க்ளிக் செய்து உலகளாவிய அளவில் ட்ரெண்ட் செய்துவிட்டனர். 


இந்த தேர்தலில் யார் ஜெயிப்பார் என்பதை விட, இந்த போட்டோ தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதை தங்கள் ட்விட்டரில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். 














 


இரு கட்சிகளுக்கு இடையே நடக்கும் தேர்தல் போட்டியில், இந்த கலகலப்பான சம்பவம், ஆஸ்திரேலிய தேர்தலை பரபரப்புக்கு இடையே கொஞ்சம் கலகலப்பாக்கியிருக்கிறது.