தெற்கு அலபாமாவில் நேற்று ஒரு மாபெரும், சூறாவளி புயலின் காரணமாக குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த புயலின் காரணமாக செல்மாவில் பல வீடுகள் சேதமடைந்தது. அலபாமாவில் உள்ள Autauga கவுண்டியில் உள்ள அவசரகால மேலாண்மை இயக்குனர் எர்னி பாகெட், ஓல்ட் கிங்ஸ்டன் பகுதியில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை உறுதி செய்தார். mobile homes மற்றும் conventional homes இரண்டும் இந்த புயலால் சேதமடைந்ததாக பாகெட் கூறினார்.
குறைந்தது 12 பேர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள அவசர சிகிச்சைப் பணியாளர்கள் மூலம் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்றார். Autauga County, Alabama, செல்மாவிலிருந்து வடகிழக்கே 41 மைல்கள் (66 கிலோமீட்டர்) தொலைவில் உள்ளது.
இந்த புயலால் 40 முதல் 50 வீடுகள் சேதமடைந்துள்ளது எனவும் இந்த புயலால் பாதிக்கப்பட்டவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். செல்மா நகரின் மேயர் கூறுகையில், பலரும் இந்த புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர் ஆனால் தற்போது வரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என கூறினார்.
மேலும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மீட்பு பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நேற்று மாலை வரை தேசிய வானிலை மையத்திலிருந்து 33 சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் ஜோர்ஜியா, தென் கரோலினா மற்றும் வட கரோலினாவில் சில சூறாவளி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சில சூறாவளிகள் அடுத்து வரும் நாட்களில் உருவாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.