பார்தி, அவரது சகோதரி நம்ரதா ஷஹானி மற்றும் உறவினர் மோஹித் பெல்லானி ஆகியோர் ஆஸ்ட்ரோவேர்ல்டு விழாவில் கலந்து கொள்ள ஒன்றாகச் சென்றனர், ஆனால் கூட்டம் மேடையை நோக்கி வந்தபோது ஒருவரை ஒருவர் தவற விட்டனர். நம்ரதா மற்றும் மோஹித் இருவரும் தங்களது மொபைல் போன்களை இழந்ததால் பாரதியை கண்டுபிடிக்க முடியாமல் தினறினர். மோஹித் கூறும்போது, “ஒருவர் விழுந்தவுடன், மக்கள் அடுக்கி வைத்த சீட்டுகட்டுகள் போல சரிய தொடங்கினர். அது ஒரு குழி போல் இருந்தது. மக்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து கொண்டிருந்தனர். தரையில் இரண்டு பேர் தடிமனான உடல்கள் போன்ற அடுக்குகள் இருந்தன. நாங்கள் மேலே வந்து உயிருடன் இருக்க சுவாசிக்க போராடினோம்." என்று கூறிய பின்னர் பாரதி சில நிமிடங்களுக்கு ஆக்ஸிஜனை இழந்ததாகவும், அதன் காரணமாக அவரது மூளை தண்டு கிட்டத்தட்ட 90% வீக்கமடைந்ததாகவும் அவர் கூறினார்.



பாரதியின் தந்தை சன்னி ஷஹானி பேசுகையில் "மருத்துவர்கள், உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை என்று கூறுகிறார்கள், இது வரை நான் என் மனைவியுடன் கூட பேசவில்லை. நாங்கள் பிரார்த்தனை செய்வோம் என்று தொடர்ந்து சொல்கிறோம். அவளுக்காக பிரார்த்தனை செய்ய ஹூஸ்டனில் உள்ள அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். ஒருவேளை பிரார்த்தனைகள் பலனளிக்கலாம். அவளுக்கு ஒரு அதிசயம் நிகழலாம்" என்று கூறினார். பின்னர் பாரதி ஹூஸ்டன் மெதடிஸ்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு செல்லும் வழியில் சிபிஆர் கொடுக்கப்பட்டது. அவருக்கு பலமுறை மாரடைப்பு ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.



அதே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரை இழந்த ஜேக்கப் ஜூரினெக் (21), ஜான் ஹில்கர்ட் (14), ப்ரியானா ரோட்ரிக்ஸ் (16), பிராங்கோ பாடினோ (21), ஆக்சல் அகோஸ்டா (21), ரூடி பெனா (23), மேடிசன் டுபிஸ்கி (23) மற்றும் டேனிஷ் பெய்க் (27) ஆகிய 8 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுமார் 50,000 பேர் கொண்ட கூட்டத்தில் ரசிகர்கள் டிராவிஸ் ஸ்காட் நிகழ்ச்சி நடத்தும் மேடையை நோக்கி விரைந்ததில் பலர் படுகாயமும், பத்துக்கும் மேற்பட்டோர் இருந்ததாகவும் குறிப்பிட்டனர். ஆஸ்ட்ரோவேர்ல்டு நிகழ்ச்சியை நடத்திய டிராவிஸ் ஸ்காட் இந்த சோகமான நிகழ்வு பற்றி ட்வீட் செய்தார், “நேற்று இரவு நடந்தவற்றால் நான் முற்றிலும் உடைந்து பொய் இருக்கிறேன். ஆஸ்ட்ரோவொர்ல்ட் விழாவில் நடந்தவற்றால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் எனது பிரார்த்தனைகள் எப்போதும் இருக்கும். ஹூஸ்டன் PD க்கு எனது முழு ஆதரவும் உள்ளது, அவர்கள் துயரமான உயிர் இழப்பைத் தொடர்ந்து பார்க்கிறார்கள். தேவைப்படும் குடும்பங்களை குணப்படுத்தவும் ஆதரவளிக்கவும் ஹூஸ்டன் சமூகத்துடன் இணைந்து பணியாற்ற நான் கடமைப்பட்டுள்ளேன். ஹூஸ்டன் PD, தீயணைப்புத் துறை மற்றும் NRG பார்க் அவர்களின் உடனடி பதில் மற்றும் ஆதரவுக்கு நன்றி. எல்லோருக்கும் என் அன்புகள்." என்று அந்த டீவீட்டில் எழுதியிருந்தார்.