33 வயது பெண் ஒருவர் ஆன்லைனில் விந்தணு மற்றும் கருத்தரிக்கும் கிட்களை வாங்கி தனது இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த ஸ்டெபனி டெய்லர் என்ற பெண் தன் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஏற்கெனவே 4 வயதில் ஒரு மகன் இருக்கிறார். தனது மகனுக்கு உடன் பிறக்காதவர்கள் இல்லாதது குறித்து டெய்லர் வருத்தமடைந்துள்ளார். இந்நிலையில் செயற்கை முறையில் 2வது குழந்தையைப் பெற்றுக்கொள்ள விரும்பிய டெய்லர் செயற்கை கருத்தரித்தல் மையங்களுக்கு சென்றுள்ளார். ஆனால் வசூலிக்கப்படும் கட்டணத்தொகையைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். கிட்டத்தட்ட 1600 டாலருக்கு மேல் செலவாகும் என அங்கு தெரிவித்திருக்கிறார்கள். அவ்வளவு தொகையை செலுத்த இயலாத டெய்லர் தன்னால் ஒருபோதும் 2வது குழந்தையை பெற்றுக்கொள்ள முடியாது என வருத்தமடைந்துள்ளார்.
இந்த சூழலில்தான் ஆன்லைனில் விந்தணுவை விற்கும் ஆப்பினைப் பற்றி அவருக்கு தெரியவந்துள்ளது.
ஆப்பினை இன்ஸ்டால் செய்த ஒரே நாளில் டெய்லர் தனக்கு பொருத்தமான ஸ்பெர்ம் டோனரைக் கண்டுபிடித்துள்ளார். அவருக்கு தீவிர உடல்நிலை பாதிப்புகள் எதுவும் இல்லாத நிலையில் அந்த ஆப் மூலமாக சம்பந்தப்பட்டவருக்கு மெசெஜ் செய்துள்ளார். தொடர்ந்து அந்த டோனர் 3 வாரங்கள் கழித்து கடந்த ஜனவரி மாதம் வீட்டிற்கே வந்து விந்தணுவை தானம் செய்துள்ளார். அவர் குறித்து பேசிய டெய்லர், ”அவர் நல்லவராக தென்பட்டார். மேலும் அன்பாகவும், நட்பாகவும் என்னிடம் பேசினார். நாங்கள் ஒரு கப் தேநீர் அருந்தினோம் மற்றும் வானிலை பற்றி பேசிக்கொண்டிருந்தோம்” என்றார்.
இதனையடுத்து கருத்தறித்தல் கிட்டை ஆன்லைன் வாயிலாக ஆர்டர் செய்துள்ளார். தொடர்ந்து, யூ டியூபை பார்த்து சுய செயற்கை கருத்தரித்தலை தானே செய்துள்ளார் டெய்லர். இரண்டு வாரங்கள் கழித்து அவர் கருத்தறித்ததை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார். தற்போது அந்த குழந்தை பிறந்துள்ள நிலையில் அந்த பெண் குழந்தைக்கு ஈடன் என பெயரிட்டுள்ளார்.
மீண்டும் ஒரு குழந்தைக்கு அம்மா ஆனதில் மகிழ்வுறுவதாகவும் அவள் உலகிற்கு வந்த விதத்தில் மிகவும் பெருமைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் டெய்லர். குழந்தை பிறந்தது பற்றி ஸ்பெர்ம் டோனருக்கு மெசெஜ் செய்ததாகவும் தெரிவித்தார். ஈடன் வளர்ந்ததும் தனது பயோலாஜிக்கல் அப்பாவை காண விரும்பினால் அதில் எந்த சிக்கலும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். தனது தங்கை, அம்மா, அப்பா ஆகியோர் ஆரம்பத்தில் சற்று தயங்கிய நிலையில் ஈடனின் முகத்தை பார்த்த பிறகு தனது இந்த செயலால் மகிழ்ச்சியடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஆன்லைனில் ஸ்பெர்மை ஆர்டர் செய்து ‘இ-குழந்தை’ பிறந்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனாலும் இது போன்ற செயல்களை வீட்டில் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் செய்வது உயிருக்கே ஆபத்தாக முடியும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
உள்ளாட்சி தேர்தல் கள நிலவரம் குறித்து அறிய...
உள்ளாட்சி உள்ளது உள்ளபடி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால் பதிக்கப் போவது யார்? A to Z களநிலவரம்!