Dictator Stalin: சர்வாதிகாரியான ஸ்டாலின் லட்சக்கணக்கானோரை கொன்று குவித்த வரலாறு கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


சர்வாதிகாரி ஸ்டாலின்


உலகில் இனப்படுகொலை என்று பேசப்படும் போதெல்லாம் ஹிட்லரின் பெயர்தான் பெரும்பாலானோரின் நினைவுக்கு வரும். ஆனால், ஹிட்லரைத் தவிர, லட்சக்கணக்கான மக்களைக் கொன்ற சர்வாதிகாரியைப் பற்றி இன்று நாம் அறிந்துகொள்வோம். ஆம், சக்திவாய்ந்த தலைவரும் சர்வாதிகாரியுமான ஸ்டாலினைப் பற்றி இந்த தொகுப்பில் அறியலாம்.


ஜோசப் ஸ்டாலின் 1929 முதல் 1953 வரை சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் (யுஎஸ்எஸ்ஆர்) சர்வாதிகாரியாக இருந்தார். 1941 முதல் 1953 வரை சோவியத் ஒன்றியத்தின் பிரதமராகவும் ஸ்டாலின் பணியாற்றினார். ஸ்டாலினின் ஆட்சியில் சோவியத் யூனியன் விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தில் இருந்து தொழில்துறை மற்றும் ராணுவ வல்லரசாக மாறியது. இருப்பினும், அவரது ஆட்சி பயங்கரவாதத்தால் நிரப்பப்பட்டது மற்றும் அவரது கொடூரமான ஆட்சியின் போது லட்சக்கணக்கான சோவியத் குடிமக்கள் கொல்லப்பட்டதாக வரலாற்று பதிவுகள் தெரிவிக்கின்றன.



ஸ்டாலினின் இளம் வயது:


ஸ்டாலின் 1878 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி ஜார்ஜியாவில் உள்ள கோரி என்ற இடத்தில் பிறந்தார். ஸ்டாலினின் சிறுவயது பெயர் ஜோசப் விஸாரியோனோவிச் சுகாஷ்விலி. அவர் பிறந்தபோது, ​​ஜார்ஜியா ரஷ்ய ஜாரிஸ்ட் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. ஸ்டாலினின் பெற்றோர் பெசாரியன் ஜுகாஷ்விலி மற்றும் எகடெரின் கெலாட்ஸே. ஜோசப் ஸ்டாலினுக்கு முன்பு அவருக்கு பல குழந்தைகள் இருந்தன. ஆனால் ஸ்டாலின் மட்டுமே உயிர் பிழைத்தார். பெஸாரியன் வேறொருவரின் கடையில் செருப்புத் தொழிலாளியாக வேலை செய்தார், அதே நேரத்தில் தாய் மற்றவர்களின் வீடுகளில் துணி துவைக்கும் வேலை செய்தார்.


தேவாலயத்தில் படிப்பு


ஸ்டாலின் 1888 முதல் 1894 வரை கோரியில் உள்ள தேவாலயப் பள்ளியில் படித்தார். பின்னர் அவர் பாதிரியாராக படிக்க டிஃப்லிஸ் இறையியல் செமினரியில் சேர்ந்தார், ஆனால் சில காலத்திற்குப் பிறகு தமக்கு மத புத்தகங்களில் ஆர்வம் இல்லை என்பதை உணர்ந்தார். கார்ல் மார்க்ஸின் புத்தகங்களை அதிகம் படிக்க தொடங்கினர். 19 வயதில், ஸ்டாலின் மார்க்சின் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு ரகசிய அமைப்பில் உறுப்பினரானார்.


அரசியல் பயணம்:


1924ஆம் ஆண்டு லெனின் இறந்ததாகத் தகவல்கள் வெளியாகின்றன. இதற்குப் பிறகு ஜோசப் ஸ்டாலின் தன்னை லெனினின் வாரிசாகக் காட்டினார். இருப்பினும், பல கட்சித் தலைவர்கள் லெனினுக்குப் பிறகு, லியோன் ட்ரொட்ஸ்கி அவர்களின் வாரிசு என்று நம்பினர். இந்த காலகட்டத்தில், ஜோசப் ஸ்டாலின் தனது சித்தாந்தத்தை அதிகளவில் பரப்ப தொடங்கினார். சோவியத் யூனியனை வலுப்படுத்துவது மட்டுமே தனது நோக்கம் என்றும், உலகம் முழுவதும் புரட்சியை ஏற்படுத்துவது அல்ல என்றும் ஸ்டாலின் முழங்கினார். ஸ்டாலினின் திட்டங்களை ட்ரொட்ஸ்கி எதிர்த்தபோது, ​​ஜோசப் ஸ்டாலின் அவரை நாட்டை விட்டு வெளியேற்றினார். 1920 வாக்கில், ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியத்தின் சர்வாதிகாரியாக மாறினார்.


லட்சக்கணக்கான மக்களை இனப்படுகொலை


வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, ”ஜோசப் ஸ்டாலின் தன்னை ஒரு மென்மையான இதயம் மற்றும் தேசபக்த தலைவராக உயர்த்தினார். ஆனால், தன்னை எதிர்த்தவர்களை ஸ்டாலின் கொன்று குவித்தார். இறந்தவர்களில் ராணுவ வீரர்களும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் அடங்குவர். கட்சியின் மத்தியக் குழுவைச் சேர்ந்த 139 பேரில் 93 பேரை ஸ்டாலின் கொன்றதாகக் கூறப்படுகிறது. இது தவிர, அவர் ராணுவத்தின் 103 ஜெனரல்கள் மற்றும் அட்மிரல்களில் 81 பேரைக் கொன்றார். இது மட்டுமின்றி, ஸ்டாலினின் ரகசியக் காவல் துறை, அவரது கொள்கைகளை மிகக் கடுமையாக அமல்படுத்தியது. இந்த நேரத்தில், கம்யூனிசத்தை எதிர்த்த மூன்று மில்லியன் மக்கள் சைபீரியாவின் குலாக் பகுதிக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டனர். இது தவிர சுமார் ஏழரை லட்சம் பேர் கொல்லப்பட்டனர்” என கூறப்படுகிறது.